அறிவியலால் மீண்டு வரும் டிஸ்கோ ராஜா - டிஸ்கோ ராஜா அதிரடி
டிஸ்கோ ராஜா - தெலுங்கு
இயக்கம் - வி ஆனந்த்
வசனம் - அப்பூரி ரவி
இசை - கார்த்திக் கட்டமனேனி
இசை - தமன் சாய்
டைட்டில் கார்டு ஓடும்போதே ஒருவரை லடாக் பனியில் அடித்து உதைத்து இழுத்துக்கொண்டு வீட்டில் கொண்டுபோய் அடைக்கிறார்கள். உடனே சிறிது நேரத்தி அங்குள்ள பனிக்கட்டிகள் உடைந்து பனிப்புயல் ஏற்படுகிறது. உடல் மெல்ல பனியில் விறைத்து போக முகம் ரவிதேஜா என காண்பிக்க டைட்டில் நிறைவடைகிறது. அதுதான் கதை. அவரை மருத்துவ நிறுவனம் மீட்டு சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைக்கிறது. அவர் யார் என பல்வேறு நபர்கள் மூலம் கண்டறிகிறார். ஏறத்தாழ காமிக்ஸில் வெளியான பதிமூன்று என்ற நபரின் கதைதான்.
ரவிதேஜா உழைத்திருக்கிறார்தான். இரண்டு வேடங்கள் உண்டு. அதில் சில சுவாரசியங்கள் உண்டு. நாங்கள் அதை சொல்லப்போவதில்லை.
ஆஹா
ரவிதேஜா, சத்யா, வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சியாக நாபா நடேஷ், தன்யாஹோப், பாயல் ராஜ்புத் வருகிறார்கள். ராம்கிக்கு பெரிய வேடமில்லை. பாபி சிம்ஹா பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். கதையில் வரும் சுவாரசிய வில்லன்தான் படத்தின் முக்கியமான பகுதி. அவர், டிஸ்கோ ராஜாவின் நண்பர்களில் ஒருவர். இந்த ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என தமனின் கடின உழைப்பில் பாடல்கள், பின்னணி இசை மனதில் தடதடக்கிறது. கேமராவும் பனி, டிஸ்கோ அரங்கு பாலீசாக இருக்கிறது.
ஐயையோ
வித்தியாசமான படம். ஆனால் டெக்கன் ஹெரால்டு உட்பட பல்வேறு பத்திரிகைகள் படம் ஊ ஊ என்று சொல்லிவிட்டார்கள். வெளியிட்ட நேரம் சரியில்லை என்கிறார்கள். ஆனால் சோதனை முயற்சியான படங்களுக்கு ரவிதேஜா ரசிகர்கள் தயாராக இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. இரண்டாம் ரவிதேஜாவுக்கான காட்சிகள் உருப்படியாக இல்லை. டிஸ்கோ ராஜாவுக்கு அதிக முக்கியத்துவம் என்பது படமாக பார்க்கும்போது சரியாக இல்லை.
கோமாளிமேடை டீம்