தெரிஞ்சுக்கோ - காளி!
giphy |
காளி
இந்துக்கடவுள். இந்த வரையறையைத் தாண்டி காளி என்றால் அழிவு சக்தி. இன்றும் இதற்காக பல்வேறு மனிதர்களை கொன்று நரபலி செய்பவர்கள் உண்டு. பெண் தெய்வ வழிபாட்டை சாக்தம் எனும் மதமாகவே இந்தியாவில் வளர்த்தெடுத்தார்கள். இன்று இந்த பாரம்பரியம் கேரளத்திலும், கோல்கட்டாவிலும் உள்ளது. இதைப்பற்றிய சில தகவல்களை நாம் இங்கு பார்ப்போம்.
கடவுள் என்பது தோன்றியபோது, மகாவித்யா எனும் பத்து பெண்கள் உருவாகின்றனர். இதில் காளிதான் முதல் இடத்தைப் பிடிக்கிறார்.
சாதாரணமாக நாம் பார்க்கும் காளி நான்கு முதல் பத்து கரங்களைக் கொண்டிருப்பார்.
இந்தியாவில் 3 கோடிகளுக்கும் அதிகமான பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும் வழிபாட்டில் உள்ளனர். இதில் பொங்கல் தின்கிற கடவுள் முதல் கள்ளு குடித்து கருவாடு தின்னுகின்ற கருப்பண்ணசாமி வரை அடக்கம்.
மேற்கு வங்கம், அசாமில் காளி பூஜை விழாவன்று அரசு விடுமுறையே உண்டு.
காளியின் கழுத்தில் கிடக்கிற மண்டையோட்டை பார்த்திருப்பீர்கள். அதனை வர்ணமாலா என குறிப்பிடுகிறார்கள். இந்தியில் உள்ள எழுத்துக்களை குறிப்பது என்பது சிலரின் கருத்து.
கடவுள்களை துதித்து அருள்பெற அவர்களை 108 முறை சுலோகம் சொல்லி பாடல் பாடி வழங்கும் முறை இந்தியாவில் உள்ளது.
நன்றி - க்வார்ட்ஸ்