கல்வியை கைவிடும் மாணவர்கள் - என்ன காரணம்?






People, Group, Children, Boy, Education, Africa, Kenya
pixabay



இந்தியாவிலுள்ள கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களை விட அதிகமாக செலவு செய்வதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வு முடிவுகளில் இந்த செய்தி தெரிய வந்துள்ளது.

தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட நூல்களுக்கு செய்யும் அதிகப்படியான செலவுகளால், பள்ளியை விட்டு இடைநிற்றல் ஆகி விடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதற்கு அரசு அவர்களுக்கு கல்வியில் ஆர்வமில்லை அல்லது பொருளாதார பிரச்னைகளை என கூறியுள்ளது. இதனால் தொடக்க கல்வியில் இடைநிற்றல் அளவு 10 சதவீதமாகவும், 6 முதல் பத்தாவது வகுப்பு வரையில் 17.5 சதவீதமாகவும் உள்ளது. மேல்நிலைப்பள்ளி அளவில் இந்த அளவு 19.8 அளவாகவும் உள்ளது.

இதற்கு முக்கியக்காரணம் கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவை கிராமப்புறம், நகர்ப்புறம் ஆகிய இருபகுதிகளிலும் ஏகத்துக்கும் ஏறிவிட்டதுதான் காரணம். இதுமட்டுமா? எழுதுபொருட்கள், நோட்டு புத்தகங்கள், உடை என பல்வேறு பொருட்களின் விலையும் ஏறிவிட்டன என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.

2017-18ஆம்ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு(அரசுப்பள்ளி) 4, 078 ரூபாய் செலவாகிறது. இதுவே தனியார் பள்ளி மாணவர்களுக்கு 12, 487 ரூபாய் செலவாகிறது. இதுவே பட்டப்படிப்பு என்று வரும்போது அரசு கல்லூரியில் படித்தால் 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இச்செலவு 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அரசு கல்வி நிறுவனங்களில் போட்டி இல்லாத காரணத்தால் தரம் குறைவாக இருக்கிறது. இதன் விளைவாக மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க விருப்பம் காட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது இந்த ஆய்வு.

நன்றி பிடிஐ செய்தி.























பிரபலமான இடுகைகள்