பெரியார் சொன்னதை அன்றே மக்கள் ஏற்கவில்லை!




No confusion in appointing TN BJP president: H Raja - News ...




ஹரிஹரன் ராஜா சர்மா என்றால் பலருக்கும் புரியாது. ஹெச்.ராஜா என்றால் அனைவரும் புன்னகை பூப்பார்கள். அந்தளவு பா..கவின் புகழை தமிழகத்தில் பரப்ப பாடுபட்டு வருபவர் இவர். பெரியாரை அவதூறு செய்வது, உயர்நீதிமன்றத்தை ஏக வசனத்தில் திட்டுவது என எப்போதும் சர்ச்சையின் மையத்தில் இருப்பது இவரது பாணி. அவரிடம் பேசினோம்.

உள்ளாட்சித் தேர்தலில் பா..க சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லையே. தமிழகத்தில் ஏன் உங்கள் கட்சி இன்னும் தடுமாறி வருகிறது?

இது கற்பனையான வாதம். நாங்கள் சில இடங்களில் மட்டும்தான் போட்டியிட்டோம். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள வாக்குகளைப் பார்த்தாலே தெரியும். நாங்கள் மெல்ல முன்னேறி வருகிறோம்.

தமிழகத்தில் பா..கவிற்கு எதிராக இருக்கும் மனநிலையைப் பற்றி....

அது உண்மை அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு மனநிலை இருப்பதாக தோற்றத்தை உருவாக்கினார்கள். இது மாறிவிடும் தன்மை கொண்டதுதான்.

பெரியார் இறந்து நாற்பது ஆண்டுகளுக்கும் பிறகு அவரைச்சுற்றி அரசியல் அமைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது தவறான கருத்து. பெரியார் சொன்னதை மக்கள் ஏற்கவில்லை. திராவிடக் கழகத்தினரின் கூட்டத்தில் சில டஜன் பேர்கள்தான் சேர்கிறார்கள். ஆண்டாள் பற்றிய பிரச்னையில் வைரமுத்துவை நான் விமர்சித்தேன். அதற்கு ஆதரவாகத்தானே நிறைய பேர் பேசினார்கள். எனக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்பட்டன? நான் செய்தது தவறு என யாரேனும் கூறினார்களா?

ரஜினி பெரியார் பற்றி பேசியுள்ளது உங்கள் கருத்து?

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது இயல்பான ஒன்று. அந்த விழாவில் சோ பற்றியும், துக்ளக் பற்றியும் பேசுவது வழக்கமாக நடப்பதுதான். அவரது பேச்சை திராவிடர் கழக ஆட்கள்தான் சர்ச்சை என்று சொல்லி போராட்டம் நடத்தினார்கள். இல்லையெனில், அவரது பேச்சு கவனிக்கப்படாமலே போயிருக்கும்.

நன்றி: டைம்ஸ். ஜனவரி 27, 2020