குழந்தைகளுக்கு சரி, தவறு தெரியுமா? - மிஸ்டர் ரோனி பதில்
மிஸ்டர் ரோனி
டிம்மர் ஸ்விட்சுகள் மின்சாரத்தை அதிகம் சேமிக்கின்றனவா?
திருகும் இந்த வகை ஸ்விட்சுகள் எளிதாக இயக்க முடிவது இதன் சிறப்பம்சம். ஆனால் இதனால், மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்று கூறமுடியாது. இதனை அணை நீரை சேமித்திருப்பது போல புரிந்துகொள்ளலாம். இதனால் மின்சாரம் சேமிப்பது போல தோன்றலாம். ஆனால் பிற ஸ்விட்சுகளைப் போலவே இதுவும் செயல்படுகிறது.
2
குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்பதைப் புரிந்துகொண்டு பிறக்கிறார்களா?
உளவியலாளர்கள் குழந்தைகள் வளர வளர வெளிப்புறச்சூழலைப் பெற்று அறிவை வளர்த்துக்கொண்டு சரி தவறுகளைப் புரிந்துகொள்கின்றனர் என்று முடிவுக்கு வந்தனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்ற விஷயங்களை புரிந்துகொள்கிறார்கள் என்று தற்போது சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆராய்ச்சி ஒன்றை செய்தனர். இதில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தைகள் மலைத்தொடர் வடிவிலான உருவத்தை உருவாக்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சில எழுத்துகளையும் அடையாளம் கண்டுபிடிக்க முயல்கின்றனர் என்று கூறினர்.
13 மாதமான குழந்தைகளிடம் செய்த சோதனையில் இரு ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு முயன்றனர். அவர்களில் ஒருவர் அழகானவர். மற்றொருவர் சுமாரான ஆள். குழந்தை அழகானவரையே பேசுவதற்கு தேர்ந்தெடுத்துள்ளது. இதிலிருந்து நிறத்தை அடையாளம் கண்டுகொள்ளும் திறனை அவர்கள் பெற்றுள்ளது தெரிய வந்தது.
நன்றி - பிபிசி