அப்பாவின் பாசத்தை புரிந்துகொள்ளும் மகன்கள்! - நாளும் பண்டிகைதான்
பிரதி ரோஜூ பண்டக - தெலுங்கு
இயக்கம் மாருதி தசரி
ஒளிப்பதிவு ஜெய் குமார்
இசை தமன் எஸ்
தெலுங்கில் நேரடியாக இங்கு வாழ்பவர்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுப்பார்கள் அல்லது வெளிநாடு வாழ் மனவாடுகளுக்கு ஏ3 ஷீட் முழுக்க புத்திமதி சொல்லி படமெடுப்பார்கள். இது இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
சதாவனம் பவதி படத்தின் மறுமதிப்பு போல இருக்கிறது. ஆனால் சுவாரசியம் குறைவு. கிராமத்தில் இருக்கும் சத்யராஜூக்கு திடீரென உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் சோதித்தால் நுரையீரல் புற்றுநோய் என கண்டுபிடித்து ஐந்து வாரங்கள் கெடு விதிக்கிறார்கள். அவரின் மூன்று மகன்கள், ஒரு மகள் ஆகியோர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் தம் தந்தையைப் பார்க்க வந்தார்களா? சத்யராஜூக்கு என்னாச்சு என்பதுதான் கதை.
ஆஹா!
சத்யராஜ், அவரது பேரனாக நடித்திருக்கும் சாய் தரம் தேஜ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜின் மூத்த மகனான ராவ் ரமேஷ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவருக்கான காட்சிகள் அனைத்துமே பகடியாக இருக்கிறது. இவரின் தான், தன் குடும்பம், தன் மகன் என்ற சுயநலம்தான் தவறு என படத்தில் செய்தி சொல்லுகிறார்கள். திருவிழா போல படத்தை எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் நீளம், வளவள பாடல்கள், சத்யராஜின் பையன்களை விட நமக்கு இவர் எப்போது சாவார் என்று எண்ணம் தோன்றிவிடுவது மைனஸ் பாய்ண்ட். அப்புறம் கிளைமேக்ஸில் அட்வைஸ் செய்யும் நாயகனின் நோக்கம் புரிய மாட்டேன்கிறது. லாஜிக்கை எல்லாம் பார்க்காமல் இருந்தால் படம் பரவாயில்லை என்று தோன்றும்.
கோமாளிமேடை டீம்