இடுகைகள்

மொழிபெயர்ப்பு நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிழலின் சிறகு! - மொழிபெயர்ப்பு அறிவியல் நேர்காணல் - மின்னூல் வெளியீடு

படம்
  அறிவியல் நேர்காணல் நூல் என்ற வகையில் ஆராபிரஸ் - கோமாளிமேடை தனது இரண்டாவது நூலை வெளியிடுகிறது. இந்த நூலில் உள்ள மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் அனைத்துமே உலக அளவில் முக்கியமான நியூ சயின்டிஸ்ட், பிபிசி சயின்ஸ்ஃபோகஸ் ஆகிய இதழ்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.  இந்தியாவில் அறிவியல் பார்வை குறைந்து மூடநம்பிக்கைகள் தலைதூக்கும் நேரத்தில் ஆய்வுகள், அதுபற்றிய கருத்து பகிர்தல் நிறைய நடக்கவேண்டும். அந்த நோக்கில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சூழலியலாளர்கள் அனைவருமே சமூகம் செல்லும் பாதையில் நடப்பவர்களல்ல.  தாங்கள் விரும்பிய பாதையில் நடந்து அதனால் புகழ்பெற்றவர்கள். வானியல், உளவியல், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, பெண்களின் நலன், காட்டுயிர் வளம், காலநிலை மாற்றம் என நிறைய விஷயங்களை மனதில் பட்டபடியே அறிவியலாளர்கள் பேசியுள்ளனர். அதனை நான் படித்து உள்வாங்கி தமிழில் எழுத முயன்றுள்ளேன். நூலை இணையத்தில் வாசிக்க... https://www.amazon.in/dp/B0B4PQJ6KQ

சமூக வலைதளங்களில் எதிர்மறையான விஷயங்கள் அதிகம் வருகின்றன! - பங்கஜ் திரிபாதி, இந்தி நடிகர்

படம்
        பங்கஜ் திரிபாதி இந்தி நடிகர் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதற்கும், அதன் பட்ஜெட்டிற்கும் தொடர்பு உள்ளதா? ஒரு படத்தை அதன் வருமானம், பட்ஜெட் வைத்து திட்டமிடக்கூடாது என்று நினைக்கிறேன். ஓடிடியைப் பொறுத்தவரை வார இறுதியில் வருமானம் கிடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள். இல்லையெனில் அதனை புறக்கணித்து விடுவார்கள். நாம் கதை சொல்லுவதில் இன்னும் கவனமாக இருப்பதுதான் முக்கியம். நீங்கள் உங்கள் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டீர்களே ஏன்? அதில் நிறைய எதிர்மறை விஷயங்கள், அரசியல் வருகின்றன. நான் இரு நாட்களுக்கு ஒருமுறை எனது சமூக வலைத்தள கணக்குகளை சோதிப்பேன். மொபைல் போன்களையும் சமூக வலைத்தளங்களையும் குறைவாக பயன்படுத்துவது நமக்கு நல்லது. அவை நம்மை பயன்படுத்திக்கொள்வதை நாம் எப்போதுமே அனுமதிக்க கூடாது. மிர்ஷாபூர் வெப் தொடரில் வன்முறை அதிகமாக உள்ளதே? இதன் இரண்டாவது பகுதியும் அப்படித்தானா? நான் வன்முறையின் ரசிகன் அல்ல. கடந்த ஏப்ரல் பொதுமுடக்க காலத்தில்தான் நான் முழு தொடரையும் பார்த்தேன். இரண்டாவது பகுதியில் வன்முறை குறைவாகவே இருக்கும். புதிய கதாபாத்திரங்கள

வெப்தொடர், சினிமா இரண்டிலும் பேலன்ஸ் செய்து நடிப்பேன்! - விஜய் வர்மா

படம்
        மொழிபெயர்ப்பு நேர்காணல் ரீடர்ஸ் டைஜஸ்ட் சுகானி சிங் நடிப்பிற்கு உங்களை அழைத்து வந்தது எது ? நான் குடும்ப தொழிலை செய்யக்கூடாதுஎன்று நினைத்தேன் . அதற்காக பேஷன் டிசைன் , டாட்டூ டிசைனர் , விழாக்களை நடத்துவது , மென்பொருள் பொறியாளர் என பல்வேறு வேலைகளை செய்துள்ளேன் . இதில் சிலவற்றை வெற்றிகரமாக செய்துள்ளேன் . சிலவற்றை மோசமாக செய்துள்ளேன் . எதுவாக இருந்தாலும் அனுபவங்கள் கிடைத்தன என்று நினைத்துக்கொண்டேன் . நான் நடிகனாக இருக்கவேண்டும் என்பதைத்தான் ரகசியமான ஆசையாக நினைத்துக்கொண்டேன் . அப்போதைக்கு அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . சினிமா , டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தது உங்கள் கனவை நிறைவேற்ற உதவியதா ? இன்ஸ்டிடியூட் , எனக்கு புதிய சன்னலைத் திறந்தது என்பது உண்மை . உண்மையில் அது விபத்துபோலத்தான் நடந்தது என்பேன் . அப்போது இன்ஸ்டிடியூட் இருபது ஆண்டுகளாக முக்கியமான நடிகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தது . நான் முதல் முறை விண்ணப்பித்தபோது அங்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை . அந்த நிராகரிப்பை என்னால் மறக்கவே முடியாது . பின்னர் , ஹைதராபாத் சென்று சூத்ரதார் என்ற நாட

இரண்டு முறை யோசித்துதான் கருத்தை சொல்லவேண்டியிருக்கிறது! - கொங்கனாசென் சர்மா

படம்
      கொங்கனாசென் சர்மா     கொங்கனாசென் சர்மா உங்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் எழுதியிருந்தீர்கள். அது உண்மைதானா? நீங்களே சொல்லுங்கள். நான் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? டாலி என்ற பாத்திரம் எனக்கு அந்த குறையைப் போக்கிவிட்டது. டாலி கிட்டி அர்  வோ சமக்தே என்ற படத்தின் பாத்திரம் அது. ஆலங்கிரிதா ஶ்ரீவஸ்தவா, ஏக்தா கபூர் ஆகியோருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் நடப்பிலுள்ள சினிமாவைப் பின்பற்றவில்லையென்றால் உங்களுக்கு சரியான சம்பளம் கிடைக்காது. நீங்கள் உங்களை ட்விட் செய்வதில் பாராட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் அரசியல் சார்பு மற்றும் எதைப்பற்றியும் பயப்படாத தன்மை தெரிகிறது? நான் இன்று ஒரு கருத்தைச் சொல்லும்போது இரண்டு முறை யோசித்துதான் சொல்கிறேன். நாட்டில் இன்று அந்தளவு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. ஒருவரின் கருத்தை பலர் ஏற்றுக்கொள்வது குறைந்துவிட்டது. பலரும் தங்கள் கருத்தை வெளியே சொல்லுவதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். எனவே எனக்கு பல்வேறு கருத்துகளை சொல்வதற்கு பதற்றமாக இருக்கிறது. ஆனால் சில கருத்துகளை உண்மையில்

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் ஏமாற்றத்தை தருகின்றன! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
          the statesman        நேர்காணல் நிர்மலா சீதாராமன் விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நான் ஆச்சரியப்படவில்லை. எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது. எம்பிகள் பலரிடமும் கருத்துகளைக் கேட்டுத்தான் மசோதா உருவானது. இதற்கு விவசாயத்துறை நரேந்திரசிங் தோமர்தான் பொறுப்பு. மசோதாவை நான் ஆத்மா நிர்பார் திட்டத்தின் கீழ் அறிவித்தேன். ஆனால் அப்போது எந்த எதிர்வினைகளும் இந்தளவு தீவிரமாக எழவில்லை. பொதுமுடக்கம் தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. என்ன மாற்றங்களை எதிர்கொண்டீர்கள் என தெரிந்துகொள்ளலாமா? பல தலைமுறைகள் பார்க்க சூழலை நாம் பார்த்துள்ளோம், முதலில் நாம் இச்சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றி்க்கொள்ளவேண்டும். ஆறுமாதங்களுக்கு அப்புறமும் கூட நாம் சவால்களுக்கு இன்னும் பழகவில்லை. இப்போது அமைச்சகங்கள் செயல்படவேண்டிய நேரம். எனவே, வேகமாக செயல்பட்டு வருகிறார்கள். கார்ப்பரேட் துறைகள் என்ன சொல்லுகிறார்கள்? ஸ்டீல் துறை மெல்ல நிமிர்ந்து வருகிறது. சீனாவில் இரும்புகளுக்கு அதிக தேவை உள்ளது. இதேபோலவே ஜவுளித்துறையில் வேலையாட்களுக்கு அதிக தேவை உள்ளது. தொழிற்சால

பெண்கள் கல்வி பற்றி முடிவெடுக்கும் முடிவு எப்படியிருந்தாலும் சரிதான்! - வித்யா பாலன்

படம்
          வித்யாபாலன்     வித்யாபாலன், இந்தி திரைப்பட நடிகை நீங்கள் அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற பெண்கள் சார்ந்த கதைகள்தான். இக்கதைகளை நீங்களாகவே இப்படி வேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா? அப்படிக்கூறமுடியாது. ஆழ்மனதில் இதுபோன்ற படங்களில் நடிக்கும் ஆசை இந்த முறையில் வெளிப்பட்டிருக்கலாம். முன்னர் ஆண்கள் வென்றதை படமாக எடுத்தார்கள். இப்போது பெண்கள் முறை என்று கூட வைத்துக்கொள்ளலாம்.  வெற்றி பெற்ற பெண்கள் என்று நீங்கள் சொன்னாலும் கூட அவர்களுக்கு இடையே ஒற்றுமைகள் அதிகம் கிடையாது. சுலு என்ற பெண்ணுக்கு விண்வெளிக்கு ராக்கெட்டுகள் அனுப்புவதை பற்றி ஏதும் தெரியாது. அவள் சகுந்தலா தேவி அளவுக்கு புத்திசாலியும் கிடையாது. சினிமா என்பதை சூழல்களை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று பார்க்கலாம். சுலு வெறும் வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி என்பதைத் தாண்டி வெளியே செல்லவேண்டும் என்பதை விருப்பமாக கொண்டவள். அவள் தனது குடும்பத்தையும், கனவையும் ஒன்றுபோலவே நினைக்கிறாள். அதனை சமநிலையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள். நமது நாட்டில் தாரா ஷிண்டே, சகுந்தலாதேவி, சுலோச்சனா ஆகியோர் எங்கும் நிறைந

என் மீது அவதூறு கூறியவர்களை சட்டப்படி போராடி வெல்வேன்! - ரியா சக்ரபர்த்தி

படம்
      ரியா சக்ரபர்த்தி     ரியா சக்ரபர்த்தி, இந்தி நடிகை சுசாந்தின் அப்பா பற்றி சொல்லுங்கள். சுசாந்த சொன்ன விஷயங்களின் படி அவருக்கும் அவரது அப்பாவிற்கும் உறவு சரியாக இல்லை. சுசாந்த் அவருடைய இளம் வயதிலேயே அப்பா, அவரது அம்மாவிட்டு பிரிந்துசென்றதை பார்த்திருக்கிறார். சுசாந்த் அவரது அம்மாவுக்கு நெருங்கியவராக இருந்திருக்கிறார். நான் சுசாந்தை சந்தித்தது 2019இல். அப்போது அவர் அவரது தந்தையை ஐந்து ஆண்டுகளாக சந்திக்கவில்லை என்பதை அறிந்துகொண்டேன். சுசாந்த மனச்சோர்வில் இருந்ததுதான் நீங்கள் அவரை விட்டு பிரியக்காரணமா?   அவர் 24 மணிநேரமும் மனச்சோர்வில் இல்லை. சில நாட்கள் அப்படியிருந்தார் என்பது உண்மை. என்னிடம் அவர் தன்னுடைய உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். நானும் சுசாந்திடம் அப்படித்தான் பழகினேன். நீங்கள் ஒருவரைப் பற்றி அக்கறைப்படும்போது, அவர் சிரமமான சூழலில் இருந்தால் எப்படி அவரை விட்டு பிரிவீர்கள். இந்த முறையில் உருவாகும் உறவு மிக அழுத்தமானது. நோயாளிக்கும் உதவும் நர்ஸ், அல்லது அவரது அம்மா என்று வைத்துக்கொண்டால் கூட குறைகளை பொருட்படுத்தாமல் அவர்களுடன்தானே இருப்பார்கள். நீங்கள் சுசாந்தின் வாழ

11ஆம் வகுப்பு படிப்பை மீண்டும் படிக்க தேவி மஹ்டோ என்ற பள்ளியில் சேர்ந்துள்ளேன். ஜகர்நாத் மஹ்டோ, கல்வி அமைச்சர்

படம்
         ஜகர்நாட் மஹ்டோ       திரும்ப மாணவரான கல்வி அமைச்சர்! ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜகர்நாத் மஹ்டோ, மெட்ரிகுலேசன் படிப்பு மட்டுமே முடித்தவர். தற்போது மாநிலத்தில் கல்வித்துறை அமைச்சராக, கல்வி இயக்க தலைவராகவும் இருக்கிறார். படிக்காதவர் அமைச்சரா என மக்கள் அவரைக் கிண்டல் செய்ய, ரோஷம் வந்த அமைச்சர் தனது படிப்பை மீண்டும் தொடர்வேன் என்று அறி்வித்துள்ளார். அமைச்சருக்கு வயது 54தான் ஆகிறது என்பது நீங்கள் அறியவேண்டிய சமாச்சாரம் வாழ்த்துகள் சார். மீண்டும் படிப்பைத் தொடர ஆர்வம் காட்டியிருக்கிறீர்கள்.? கடந்த ஜனவரி மாதம் நான் ஹேமந்த் சோரன் அரசில், நான் கல்வி அமைச்சராக பதவியேற்றேன். பத்தாவது மட்டும் படித்தவர் எப்படி கல்வி அமைச்சர் ஆகலாம் என மக்கள் இணையம் முதல் நாளிதழ்கள் வரை கிண்டல் செய்தனர். அது என் மனதை கடுமையாக  காயப்படுத்தி விட்டது. எனவே நான் அதிலுள்ள உண்மையை உணர்ந்து 11ஆம் வகுப்பு படிப்பை மீண்டும் படிக்க தேவி மஹ்டோ என்ற பள்ளியில் சேர்ந்துள்ளேன். இந்த பள்ளியை நான் 2005ஆம் ஆண்டு தொடங்க உதவினேன். படிப்பை ஏன் சிறுவயதில் கைவிட்டீர்கள்? நான் ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்தவன். போகாரோவிலுள்ள டெலோ என

அரசியல் தளத்தில் இருந்தாலும் கண்ணியமாக நாகரிகமாக பேசிப்பழக வேண்டும்! -சச்சின் பைலட்

படம்
      சச்சின் பைலட்       மொழிபெயர்ப்பு நேர்காணல் சச்சின் பைலட், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் நீங்கள் கடந்த ஒரு வாரமாகவே ஜெய்ப்பூரில் இல்லை. உங்களது மீது ஆளும் அரசு புகார் செய்துள்ளதே? அரசு செய்த புகாரை நாங்கள் கட்சி தலைமையிடம் கொண்டு சென்றோம்.அவர்கள் அதைக் குறித்து விசாரிப்பதற்கு முன்னரே மாநில அரசு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையை எடுக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் மீது சபாநாயகர் புகார் அளித்தார். பதவி நீக்க நடவடிக்கை வரை எடுக்கப்பட்டது.மாநில முதல்வர் கொண்ட கருத்துகளுக்கு மாற்று கருத்துகள் எம்எல்ஏக்களுக்கு இருந்தது. அதற்கு உடனடியாக கட்சிக்கு துரோகம் செய்தார், நாட்டிற்கு துரோகம் செய்தார் என்று கோஷங்கள், பேட்டிகள் அளிக்கப்பட்டன. இவையெல்லாம் இதற்கு தேவையில்லாதவை. அந்த நேரத்திலும் கூட நான் கட்சிக்கு எதிராக, மாநில முதல்வருக்கு எதிராக எந்த வார்த்தையும் பேசவில்லை. டில்லியில் பிரியங்கா, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினேன். மூன்று மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்களோடு இணக்கமாக செல்ல சூழல் உந்துதல்தான் காரணமா? பிரச்சினைகளை அமர்ந்து பேசி தீர்ப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இர

மெட்ரோ ரயில்சேவையை இரண்டு நாட்கள் போதும்! -மஞ்சு சிங், டில்லி மெட்ரோ ரயில் இயக்குநர்

படம்
              மஞ்சு சிங், டில்லி மெட்ரோ ரயில் இயக்குநர் மெட்ரோ ரயில் டில்லிவாசிகளுக்கு முக்கியமான போக்குவரத்து சாதனம். இதனை இயக்காமல் தாமதப்படுத்தினால் மக்கள் இந்த போக்குவரத்திலிருந்து தனியார் போக்குவரத்திற்கு மாறிவிடுவார்களே? தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், பொதுப்போக்குவரத்து போல நிலைத்து நின்று சேவை வழங்க மாட்டார்கள். இப்போது கொரோனா காரணமாக, நாங்கள் மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தி வைத்துள்ளோம். விரைவில் நாங்கள் சேவையைத் தொடங்கும்போது மக்கள் தானாகவே எங்கள் சேவையை பயன்படுத்துவார்கள். பொதுமுடக்க தளர்வின்போது உள்துறை மெட்ரோ ரயில்சேவையை பயன்படுத்த கூறினால் உங்களால் சேவையை தொடங்கியிருக்க முடியுமா? எங்கள் சேவையைத் தொடங்க அதிக நாட்கள் தேவை இல்லை. இரண்டு நாட்கள் போதும். உடனே சேவையைத் தொடங்கிவிடுவோம்.ரயில் நிலையங்களை தூய்மைபடுத்தி கிருமிநாசினி தெளிப்பது மட்டும்தான் பாக்கிப்பணி. முழுமையான சேவையைத் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ரயிலில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்தால் போதும். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை.  மெட்ரோ ரயில் நிறுவனம் வாங்கிய கடன்தொகை எப்படி செலுத்துகிறீர்கள்? அரசிடம் நாங்கள

நடிகராக இல்லை என்றால் வேலையே இல்லாத நடிகராக இருந்திருப்பேன்! அனுபம் கேர்

படம்
          அனுபம் கேர்         அனுபம் கேர் , இந்திமொழி நடிகர் பொதுமுடக்க காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ? இக்காலத்தில் உங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை . நீங்கள் விரும்புகிற உறவுகள் , உணவுப்பொருட்கள் , வைஃபை ஆகியவைதான் அவை . நீங்கள் நடிகராக இல்லை என்றால் என்னவாக ஆகியிருப்பீர்கள் ? வேலையே இல்லாத நடிகராக இருந்திருப்பேன் . நீங்கள் உங்களுக்கு ஆதர்சமாக நினைக்கும் நடிகர்களைக் குறிப்பிடுங்கள் ராபர்ட் டி நீரோ , திலீப் குமார் . உங்களுக்கு திரையில் சிறந்த மகனாக நடித்தவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள் ? 1995 ஆம் ஆண்டு என்னுடைய மகனாக ஷாருக்கான் நடித்தார் . உங்கள் மகளாக நடித்த நடிகையரில் யார் பெஸ்ட் ? பூஜா பட் , மந்தா நாகின் , பர்மிந்தர் நாக்ரா பத்து ரூபாய்க்கு குறைவாக நீங்கள் வாங்கிய பொருள் ? பார்லே ஜி பிஸ்கெட் , வடாபாவ் ஆகியவற்றை வாங்கினேன் . வடா பாவ் வாங்கிச்சாப்பிட உங்களுக்கு பிடித்த இடம் எது ? மெஹ்பூப் ஸ்டூடியோ கேண்டீன் . இந்துஸ்தான் டைம்ஸ்

குஜராத் மாடலை ராஜஸ்தான் அரசியலுக்கும் மடைமாற்றுகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! - திக்விஜய் சிங்!

படம்
      காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்           மொழிபெயர்ப்பு நேர்காணல் திக்விஜய் சிங் , காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜஸ்தானில் உள்ள அரசியல் நிலையை எப்படி புரிந்துகொள்கிறீர்கள் ? இந்திய பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தங்களது குஜராத் மாநில மாடல் அரசியலை உள்ளே கொண்டு வர முயல்கின்றனர் . வாஜ்பாய் , அத்வானி இருந்தபோது பாஜக இதுபோல விதிகளை மீறி செயல்படவில்லை . ஆனால் இன்று அனைத்து அடிப்படை அறங்களையும் மீறி எம்எல்ஏக்களை 25 கோடி வரை விலை பேசி வருகின்றனர் . உ்ங்கள் கட்சியில் ஏற்படும் குழப்பங்களை பாஜக சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதே ? அனைத்து கட்சிகளிலும் இதுபோல உட்கட்சி பிரச்னைகளை உண்டு . காங்கிரசில் சேர்ந்துள்ள இருபது சதவீதம் பேர் , அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து அவர்களை நோக்கி செல்கிறார்கள் இவர்களுக்கு கட்சி சார்ந்த கொள்கை , அதன் வழிமுறை எதிலும் பிடிப்பு இருப்பதில்லை . ஜோதிரா சிந்தியா உங்களை தாக்கிப் பேசியுள்ளாரே ? நான் அவருக்கு எதிராக எப்போதும் பேசியது கிடையாது . அவரது தந்தையை காங்கிரஸ் கட்சிக்கு நான்தான் அழைத்து வந்தேன் . ஜோதிராவு

நீங்கள் வாளை விரும்பினால் அதனால் தாக்கப்பட்டு இறக்கவும் தயாராக இருக்கவேண்டும்! - இந்தி நடிகர் சங்கி பாண்டே

படம்
      சங்கி பாண்டே       சங்கி பாண்டே , இந்தி நடிகர் காமெடி நடிகராக இருந்தீர்கள் . திடீரென வில்லன் பாத்திரங்களை எடுத்து நடிக்க ஆரம்பித்து வீட்டீர்களே ? நான் பிரேம் சோப்ரா , அம்ஜத் கான் , அம்ரிஷ் பூரி ஆகியோரின் ரசிகன் . இவர்களைப் பின்பற்றி வில்லனாக முயன்றேன் . ஆனால் எனக்கு இந்த பாத்திரங்கள் எளிதாக கிடைக்கவில்லை . பேகம் கான் , சாஹோ ஆகிய படங்களில் வில்லன் பாத்திரம் கிடைத்தது . இப்போது ஜீ 5 தொடரில் நடித்து வருகிறேன் . இது மாணவர்களால் கிண்டல் செய்யப்படும் . தெருவில் நாய்களால் விரட்டப்படும் ஆசிரியராக நடிக்கிறேன் . ஓடிடி தளத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? இந்தவகை திரையிடலுக்கு இதுவரை சென்சார் முறை கிடையாது . எனவே கிரியேட்டிவிட்டிக்கு எல்லையே இல்லை . இதன் காரணமாக பலரின் வீட்டுக்கு , ஹாலுக்கு ஏன் பாத்ரூம் கூட சென்றுவர முடிகிறது . சமூக வலைத்தளங்கள் எங்கும் சுஷாந்தின் மரணம் ஒட்டிய ஏராளமான எதிர்மறை கருத்துகள் நிறைந்துள்ளன . நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? நீங்கள் வாளை விரும்பினால் , அதனால் தாக்கப்பட்டு இறக்கவும் தயாராக இருக்கவேண்டும் .

எங்களது அமைப்பு தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும். அவர்களோடு போட்டியிடாது! - ஜி. நாராயணன்

படம்
cc மொழிபெயர்ப்பு நேர்காணல் ஜி . நாராயணன் , நியூ ஸ்பேஸ் இந்தியா லிட் . நிறுவனத் தலைவர் . விண்வெளித்துறையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு திறந்துவிட்டுள்ளது . இதில் ஸ்பேஸ் இந்தியாவுக்கும் தனியார் நிறுவனங்களுக்குமான பங்கு என்ன ? மிகப்பெரிய திட்டம் இதன் பின்னால் உள்ளது . இனி இஸ்ரோ நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்து செயல்படும் . ஸ்பேஸ் இந்தியா அமைப்பு , வ ணிக ரீதியான ராக்கெட் ஏவுதல்கள் செயல்பாடுகளை செய்யவுள்ளது . இதன்மூலம் விண்வெளித்துறையில் இந்தியா புதிய சந்தையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது . உங்களுடையது அரசு அமைப்பு , தனியார் அமைப்புகளை வரவேற்பதாக கூறுகிறீர்களே எப்படி ? இஸ்ரோ அமைப்பு , அனைத்து பொருட்களையும் தானே தயாரித்துக்கொள்ளும் திறன் கொண்டதல்ல . இன்று வரை 60 சதவீத செயற்கைக்கோள்களையும் , 80 சதவீத ராக்கெட்டுகளையும் இஸ்ரோ தனியார் நிறுவனங்களிடம் தயாரித்து தரச்சொல்லி வாங்கி பயன்படுத்தி வருகிறது . எங்கள் அமைப்பின் நோக்கம் , தனியார் நிறுவனங்களை இத்துறையில் அதிகளவு ஈடுபடுத்துவதுதான் . ஐடி துறையில் இந்தியா பெற்ற வெற்றியை விண்வெளித்துறையில் அடைய இஸ்ரோ எண்ணுக

சமூக வலைத்தளத்தில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை பதிவு செய்வதில்லை! -ஜெய்தீப் அகாலத்

படம்
ஜெய்தீர் அகாலத் - பாதாள்லோக்  ரீடர்ஸ் டைஜஸ்ட் நேர்காணல் ஜெய்தீப் அகாலத் இந்தி நடிகர் நீங்கள் ராணுவ அதிகாரியாக ஆகவேண்டும் என்று விரும்பியது உண்மையா? உண்மைதான். நான் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்குள்ள மாணவர்கள் பெரும்பாலும் ராணுவத்தில் சேருவதற்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள். அப்போது எனக்கும் அதே லட்சியம்தான் கண்முன்னால் இருந்தது. திரைப்படங்களில் நடிக்க வந்தது எப்படி? பாதுகாப்பு படைக்கான தேர்வை நான்கு முறை எழுதினேன். அனைத்திலும் தோல்வி, விரக்தி. மனம்போன போக்கில் சுத்தினேன். பின்னர் நாடகம் சார்ந்து இயங்க நினைத்தேன். அதற்காகவே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பாடத்தை எடுத்து படித்தேன். இதனால் பல்வேறு பல்கலைக்கழகம் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க முடியும். பின்னர்தான் புனேவிலுள்ள டிவி மற்றும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்தேன். 2 கேங்க் ஆப் வாசிப்பூர் படத்தில் சாகித் கான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தீர்கள். அதற்கு எப்படி வரவேற்பு கிடைத்தது? நான் நடித்தபோது ஃபேஸ்புக் மிகவும் புகழ்பெற்றிருந்த து. பலரும் படத்தின் ஸ்டில்களை எடுத்துப்போட்டு என்னை பாராட்டியிருந்தனர். அனுராக் காஷ்யப்

விவசாயத்துறையில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தவேண்டும்! - பர்னிக் சித்ரன் மைத்ரா

படம்
cc பர்னிக் சித்ரன் மைத்ரா ஆர்தர் டி லிட்டில் நிறுவன தலைவர் இந்தியாவின் வேளாண்மை எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்? இந்தியா சுதந்திரம் பெற்றபிறகுதான் விவசாயத்தில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டது. இப்போதும் கூட 60 சதவீத விவசாய வளர்ச்சியைத்தான் இந்தியா பெற்றுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கான சரியான விலை கிடைக்கவிடாமல் தடுப்பது ஏபிஎம்சி சட்டமும், இடைத்தரகர்களும்தான். இதற்கு விதிவிலக்காக பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரம் உள்ளன. அரிசி, கோதுமை மட்டும் விலைப்பிரச்னையில் சிக்காமல் உள்ளது. விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இன்றுவரை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை விட 50 சதவீதம் குறைந்த விலையே கிடைத்து வருகிறது. இதன்காரணமாக வேளாண்மை காரணமாக பொருளாதாரத்திற்கு கிடைக்கும் வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பிற வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த பொருளாதார வளர்ச்சி 100 முதல் 300 சதவீதமாக உள்ளது. வேளாண்மை செய்வது சூழலுக்கு உகந்த தொழிலாக மாறியுள்ளது என்கிறீர்களா? வேளாண்மை தொழிலானது 52 சதவீத தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டு உற்பத்தியில் இதன் அளவு 13 சதவீதமாக உள