சமூக வலைத்தளத்தில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை பதிவு செய்வதில்லை! -ஜெய்தீப் அகாலத்
ஜெய்தீர் அகாலத் - பாதாள்லோக் |
ரீடர்ஸ் டைஜஸ்ட் நேர்காணல்
ஜெய்தீப் அகாலத்
இந்தி நடிகர்
நீங்கள் ராணுவ அதிகாரியாக ஆகவேண்டும் என்று விரும்பியது உண்மையா?
உண்மைதான். நான் ஹரியாணா
மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்குள்ள மாணவர்கள் பெரும்பாலும் ராணுவத்தில் சேருவதற்குத்தான்
முன்னுரிமை அளிப்பார்கள். அப்போது எனக்கும் அதே லட்சியம்தான் கண்முன்னால் இருந்தது.
திரைப்படங்களில் நடிக்க வந்தது எப்படி?
பாதுகாப்பு படைக்கான தேர்வை
நான்கு முறை எழுதினேன். அனைத்திலும் தோல்வி, விரக்தி. மனம்போன போக்கில் சுத்தினேன்.
பின்னர் நாடகம் சார்ந்து இயங்க நினைத்தேன். அதற்காகவே கல்லூரியில் ஆங்கில இலக்கியம்
பாடத்தை எடுத்து படித்தேன். இதனால் பல்வேறு பல்கலைக்கழகம் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க
முடியும். பின்னர்தான் புனேவிலுள்ள டிவி மற்றும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்தேன்.
2 |
கேங்க் ஆப் வாசிப்பூர் படத்தில் சாகித் கான் கதாபாத்திரத்தில்
நடித்திருந்தீர்கள். அதற்கு எப்படி வரவேற்பு கிடைத்தது?
நான் நடித்தபோது ஃபேஸ்புக்
மிகவும் புகழ்பெற்றிருந்த து. பலரும் படத்தின் ஸ்டில்களை எடுத்துப்போட்டு என்னை பாராட்டியிருந்தனர்.
அனுராக் காஷ்யப்பின் படத்தில் நடிகர்கள் சிறப்பாக நடித்திருப்பார்கள். ஆனால் எனக்கு
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன் என்பதை நான் நம்பவில்லை. ஆனால் மக்கள் என்னை
ஏற்றுக்கொண்டனர் என்பதை சாலையில் செல்லும்போது உணர்ந்தேன். எனக்கு மகிழ்ச்சியாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.
பாதள் லோக்கில் நடித்தது
எப்படி உணர்கிறீர்கள்?
என்னுடைய கதாபாத்திரம் இந்த
படத்தில் நீளமாக இருக்கிறது. அதனால் மக்கள் என்னை பார்த்து நடிப்பு நன்றாக இருக்கிறது
என்று புகழ்ந்து பேசுகிறார்கள். நான் இதற்கு முன்னரே கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர், ராசி,
விஸ்வரூபம் ஆகிய படங்களில் நடித்திருந்தேன். வெறும் விமர்சகர்கள் மட்டுமல்லாது சாதாரண
மக்களிடமும் நான் சென்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சி.
பெருந்தொற்று காரணமாகத்தான் இணையத்தொடர்கள் படங்கள் பிரபலமடைவதாக
நினைக்கிறீர்களா?
நிலைமை மாறினாலும் மாறாவிட்டாலும்
நான் எனது நடிப்பை எப்போதும் போலவே தொடர்ந்துகொண்டிருப்பேன்.
இங்குள்ள மக்களில் சிலருக்கு சமூக வலைத்தள கணக்குகள் கூட
கிடையாது.
நான் ஃபேஸ்புக்கில் என்ன
சாப்பிட்டேன், என்ன நூல்களை படித்துக்கொண்டிருக்கிறேன் என்று பதிவுகளை போடுவது கிடையாது.
உண்மையில் எனக்கு தெரிந்த ஏதாவது விஷயங்கள் இருந்தால் அதனை அதில் பதிவு செய்வேன். மற்றபடி
எனது தனிப்பட்ட விஷயங்களை நான் அதில் பதிவு செய்வது கிடையாது. அதனை அடிக்கடி சோதிப்பதும்
குறைவே.
அன்னா வெட்டிகாட்.
கருத்துகள்
கருத்துரையிடுக