ஏழைகளைக் காக்க முயலும் மக்களின் பிரதிநிதி! - அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ்
அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ் - யாஹூ நியூஸ் |
அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ
கார்டெஸ்
1989ஆம் ஆண்டு அமெரிக்காவின்
நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் பிறந்தவர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி.
இவர், 14ஆவது மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டுவருகிறார்.
2008ஆம் ஆண்டு அமெரிக்காவில்
பல்லாயிரம் மக்கள் வால்ஸ்ட்ரீட் பொருளாதார சிக்கலால் வாழ்க்கையை இழந்தனர். அதில் கார்டெஸின்
குடும்பமும் தடுமாறி வீழ்ந்தது. அவரின் தந்தை நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோயால் காலமானார்.
வால்ஸ்ட்ரீட்டை அமெரிக்க அரசு பின்னாளில் மீட்டு எடுத்தது. ஆனால் அதனால் வாழ்க்கையை
இழந்த குடும்பங்களை அரசு கவனிக்கவே இல்லை.
வாஷிங்க்டன் நகரம் எப்படி
சக்தியுள்ளவர்களை பாதுகாத்து உழைக்கும் தன்மையுள்ள மக்களை கைவிடுகிறது என்பதை தெரிந்துகொண்டார்
கார்டெஸ்.
அவர் தனக்கு எதிரான விஷயங்களுக்கு
முன்னே போராளியாக தெரிந்தார். படிப்பிற்கு வாங்கிய கடன் கண்முன்னே மலையாக தெரிந்தது.
தங்களிடம் அதிகாரம் இருந்தால்தான் பிழைத்திருக்க முடியும் என்று கார்டெஸ் நம்பினார்.
அதற்காக உழைக்கத் தொடங்கினார். மது விடுதியில் பணத்திற்காக வேலை செய்து வந்தவரை இன்று
காண ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர். ஊழல், நேர்மையின்மை அரசு எந்திரத்தில் எப்போதும்
உண்டுதான். அதற்கு எதிரான போராட்டத்தை இப்போதுதான் கார்டெஸ் தொடங்கியுள்ளார்.
எலிசபெத் வாரன்
கருத்துகள்
கருத்துரையிடுக