தங்கைகளுக்கு கல்யாணம் செய்ய அண்ணன் செய்யும் தில்லுமுல்லு! - கத்தி காந்தாராவ்
கத்தி காந்தாராவ் 2010
இயக்கம் இ.வி.வி சத்யநாராயணா
வசனம் பிரசாத் வர்மா
ஒளிப்பதிவு அடுசுமிலி விஜயகுமார்
இசை மல்லிகார்ஜூனன்
காவல்நிலையத்தில் அப்பாவின் விருப்ப ஓய்வு காரணமாக கான்ஸ்டபிள் வேலை அவரது மகனுக்கு கிடைக்கிறது. அப்பா, தனது வேலையை மகனுக்கு கொடுத்ததால் குடும்பத்தில் உள்ள இரு தங்கைகளுக்கும் அவன்தான் திருமணம் செய்து வைக்கவேண்டும். அதுவரை அவன் திருமணம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கிறார். அதோடு, அதனை முத்திரைத்தாளில் பதிவு செய்து கையெழுத்தும் வாங்கிக்கொள்கிறார். இந்த நிலையில் மகனுக்கு காதல் வருகிறது. அவன் என்ன முடிவெடுத்தான் என்பதுதான் கதை.
ஆஹா
படம் முழுக்க நரேஷ், வேணு மாதவின் காமெடிதான் பின்னி எடுக்கிறது. பார்க்கில் காதலர்களை மிரட்டு காசு பிடுங்குவது அக்காக்களின் கணவர்களுக்கு வரதட்சணை கொடுக்க தில்லுமுல்லு செய்வது, தங்கைக்காக கமிஷனரையே மிரட்டுவது என வேறு லெவலில் நடித்திருக்கிறார். இறுதியில் தன் மாமனார் கிராமத்தில் பிரசிடெண்ட் ஆகவும் சூப்பர் ரூட் போட்டுக்கொடுத்து அனைவரின் மனதையும் வெல்கிறார். காம்னாவைப் பொறுத்தவரை காதலுக்கு அதிக நேரமில்லை, முழுக்க பாடல்களுக்கு மட்டும் பரவசமாக வந்து ஆடிவிட்டு போகிறார். கோட்டா வெங்கடேஸ்வரராவின் பாத்திரம் நன்றாக இருக்கிறது. காது கேட்காத அவரது மனைவியிடம் அவர் படும் பாடுகள் சிரிக்க வைக்கின்றன.
சத்யநாராயணா இயக்கி அவரது மகன் நரேஷ் நடித்த கடைசிப் படம் இதுதான். அவரது காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் பிரமாதமாக வேலை செய்திருக்கிறது.
ஐயையோ
கமிஷனரையும், இன்ஸ்பெக்டரையும் திட்டம் போட்டு கான்ஸ்டபிள் மிரட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று முழுக்க நரேஷை மட்டுமே படம் நம்பியிருக்கிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக