மீண்டும் எழுச்சி பெற்று தாக்குதலைத் தொடங்கியுள்ள மாவோயிஸ்ட் அமைப்புகள்! - அதிரடி தாக்குதல்கள் தொடங்கின!



சத்தீஸ்கரில் 57 நக்சலைட்டுகள், 297 ...
நக்சலைட்டுகள் - மாலைமலர்



தாக்குதலைத் தொடங்கிய மாவோயிஸ்டுகள்

 கடந்த ஜூலை 14, 15 தேதிகளில் மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தெலங்கானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் எல்லையில் துப்பாக்கிச்சூடுகளை நடத்தினர். இவர்கள் இப்பகுதியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிந்தது முதல் மாவோயிஸ்டுகள் அமைதி காத்து வந்தனர். மத்திய மாநில படைகள் இங்கு ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். தெலங்கானாவில் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா என்பவர் மாவோயிஸ்ட் படையைத் தொடங்கினார். தற்போது புதிய மாவோயிஸ்ட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 பேர் கொண்ட குழுவில் தெலங்கானாவிலிருந்து பத்து பேரும், ஆந்திரம், மகாராஷ்டிரம், கொல்கத்தாவிலிருந்து தலா இரண்டு பேரும், ஜார்க்கண்ட் நான்கு பேரும், பீகாரிலிருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்தி பலரும் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர் என்கிறது காவல்துறை. ”சத்தீஸ்கரிலுள்ள இந்த அமைப்பின் தலைவர்கள் எங்கள் மாநிலத்தின் அமைதியைக் குலைக்க முயல்கின்றனர்” என்கிறார் தெலங்கானா டிஜிபி மகேந்திர ரெட்டி.

1980-90 காலகட்டத்தில் இருந்த மக்களின் ஆதரவு, மாவோயிஸ்டுகளுக்கு இப்போது கிடைத்துள்ளது. இதனால் அவர்களை முற்றிலும் அழிக்க முடியாமல் தடுமாறுகிறது காவல்துறை. ரைத்து பந்து போன்ற திட்டங்கள் நிலமுள்ள விவசாயிகளுக்கு உதவினாலும் நிலமில்லாதவர்களும், ஏழைகளும் சிரமப்பட்டுதான் வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் எழுச்சியை அரசு நிர்வாகத்தால் தடுக்க முடியவில்லை. தற்போது தெலங்கானா, ஆந்திரத்தில் 12 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு படைகள் தீவிரமாக மாவோயிஸ்டுகளை வேட்டையாடியதால் அவர்களின் படைகள் அழிக்கப்பட்டு சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மட்டும் செயல்படும் படி நிலைமை மாறியது. தற்போது, இதன் அரசியல் கமிட்டி தலைவர் ஜெகன், எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 பேரை போலி என்கவுன்டர் மூலம் அரசு படைகள் கொன்றுள்ளன. இது தொடர்ந்தால் டிஆர்எஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் இதற்கான விலையைத் தரவேஎண்டியிருக்கும் என்று மிரட்டலாகவே பேசியுள்ளார்.

மேற்சொன்ன மூன்று இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு மைலார்ப்பு அடெல்லு எனும் பாஸ்கர் தலைக்கு 25 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளனர். மூன்றுமுறை கைக்கு கிடைத்தும் இக்குழுவை காவல்துறையால் அவர்களைப் பிடிக்கமுடியவில்லை. மாவோயிஸ்ட் தலைவன் பாஸ்கரை உயிருடன் அல்லது பிணமாகவோ பிடிக்க காவல்துறை முயன்றுவருகிறது. இந்த நடவடிக்ககை தாமதமாகும் காலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பு மக்களிடையே தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்தியா டுடே

அமர்நாத் கே மேனன்


கருத்துகள்