தியேட்டரில் கிடைக்கும் அனுபவத்தை வீட்டில் பெறமுடியாது! - வி.செந்தில்குமார், க்யூப் டெக்னாலஜி
வி.செந்தில்குமார்
துணை நிறுவனர், க்யூப் சினிமா டெக்னாலஜி
ஆஸ்கார் விருது குழுவின் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை
கேள்விப்பட்டோம். எப்படியிருக்கிறது இந்த அனுபவம்?
பொதுவாக சினிமாவின் உருவாக்கத்தில்
நாங்கள் பங்குபெறுவதில்லை. அதனை பார்க்கும் அனுபவத்தை மாற்றித்தரும் தொழில்நுட்பம்
சார்ந்து வேலை செய்கிறோம். எனவே, இதற்கான பிரிவில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டு
அழைத்திருக்கிறார்கள். பொதுவாக படத்தில் கூட எங்கள் தொழில்நுட்பத்திற்காக அங்கீகாரம்
வழங்கப்படாது.
கொரோனா பாதிப்பால் படங்கள் வெளியாக தியேட்டர்கள் திறக்கப்படாத
நிலைமை. இதனால் பலரும் ஓடிடி தளங்கள் படத்தை வெளியிடத்தொடங்கியுள்ளனர். இச்சூழ்நிலையை
நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஆகஸ்ட் மாத மத்தியில் தியேட்டர்கள்
திறக்கப்பட்டு பழைய படங்கள் ஓடும் வாய்ப்பு உள்ளது. அப்படி சூழல் மாறினால் செப்டம்பர்
மாதம் முதல் புதிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் கோவிட் -19 நோய்த்தொற்று
எண்ணிக்கை குறையாமல் பரவினால் அடுத்த ஆண்டு மார்ச்சில்தான் தியேட்டர்கள் திறக்கும்
வாய்ப்பு உள்ளது.
சினிமா தியேட்டர்களை விட ஓடிடி தளங்களில் வெளியிட பணம் குறைவாகவே
செலவிடப்படுகிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் அப்படி யோசிக்கவில்லை.
தியேட்டரில் வசூலிக்கும் டிக்கெட் கட்டணம் போன்று ஓடிடியில் நிர்ணயிக்க முடியாது. புதிய
படங்களுக்கு அதிகபட்சமாக அவர்கள் 500 ரூபாய் விலை வைப்பார்கள். இந்த விலையில் நீங்கள்
படம் பார்த்தால், படங்களுக்கு உரிய லாபம் கிடைக்காது ஒருவேளை தியேட்டர் திறக்கப்படாமல்
போனால் தயாரிக்கப்படும் படங்களின் பட்ஜெட் குறையவும் வாய்ப்பு உள்ளது.
தியேட்டர் அனுபவத்தை வீட்டில்
இணையதளம் மூலம் பார்ப்பது தராது. காரணம் தியேட்டரில் படம் ஓடும்போது அதனை நீங்கள் நிறுத்தி
வைத்து உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. எனவே, கவனம் சிதறினால் அந்த காட்சியை
நீங்கள் பார்க்கவே முடியாது. அடுத்து, வீட்டில் படம் பார்க்கும்போது நிறைய தொந்தரவுகள்
இருக்கும். படத்தை தியேட்டர்களில் பார்க்கும்போது ஒருவரின் உணர்ச்சி உங்களை பாதிக்கும்.
உங்களது உணர்ச்சி பிறரைப் பாதிக்கும். இதுதான் தியேட்டர்களில் படங்களை ரசிக்க வைக்கிறது.
தியேட்டர் டிக்கெட்டுகளின் விலை குறைய வாய்ப்புள்ளதா? நேரடியான
ஓடிடி வெளியீடிற்கு அதிக பணம் தற்போது அளிக்கப்படுகிறதே?
படங்களை தயாரிப்பவர்கள்,
குறைந்தபட்சம் பாதுகாப்பு கருதுவது வாடிக்கை. ஓடிடி தளங்கள் தயாரிப்பு செலவில் 15 சதவீதத்தை
தருவார்கள். படம் நிச்சயமாக ஹிட்டாகி ஓடும் என்ற ந்ம்பிக்கையில்தான் ஒவ்வொரு படமுமே
தயாரிக்கப்படுகிறது. இல்லையென்றால் எந்த நம்பிக்கையில் ஆண்டுதோறும் எராளமான படங்கள்
வெளியாகின்றன. திரைத்துறை பழைய நிலைக்கு திரும்புவது இவர்களது கையில்தான் உள்ளது.
இன்று இந்தி சினிமாவை விட தென்னிந்திய சினிமாக்கள் கதையின்
அம்சத்தால் உயர்ந்து நிற்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். ஓடிடி
தளங்களாக அல்லது டிடிஹெச் வசதியா?
நீங்கள் சொன்ன இருவகை ஊடகங்களும் சினிமாவுக்கு தேவையானவைதான். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்யப்படுகிறது. அதனை நீங்கள் தியேட்டரில் பார்த்தால்தான் அனுபவிக்க முடியும். அதேபோல நடுத்தர பட்ஜெட்டில் உருவாக்கப்படும் எளிமையான கதைகளைக் கொண்ட படங்களுக்கு ஓடிடி அல்லது டிடிஹெச் போன்றவை சரியாக இருக்கலாம். தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை இவை தராது.
அவுட்லுக்
கருத்துகள்
கருத்துரையிடுக