உணர்ச்சிகரமாக நடிக்கும் அற்புத நடிகை! - யாலிட்ஸா அபாரிசியோ
hr |
யாலிட்ஸா அபாரிசியோ
இருபத்தைந்து வயதுதான் ஆகிறது
யாலிட்ஸாவுக்கு. ஆனால் தான் நடித்த ரோமா என்ற முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்ட
நடிகை என்ற பெருமையை பெற்றுவிட்டார். படத்தில் ஆர்ப்பரிக்கும் கடல் அலையை நோக்கிச்
செல்வார். இவர் நடிப்பிலும் அப்படித்தான். மிக்ஸ்டெகோ என்ற மொழியை பேசாவிட்டாலும் அதனைக்
முழுக்க கற்றுக்கொண்டார். வசன உச்சரிப்பில் உருவான உயிரோட்டம் இதன்காரணமாகத்தான், நம்
இதயத்தை அடைந்தது. நாம் முடியாது என்று நினைக்கும் பல்வேறு சவால்களை இவர் சாதித்து
காட்டியுள்ளார்.
நான் அவரை 3 ஆயிரம் பேர்களை
ஆடிஷன் செய்த பிறகு சந்தித்தேன். அவரை தேர்வு செய்யும் அறைக்குள் வந்தவர், பேசியது
இதுதான். நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன். ஆசிரியை ஆவதற்காக காத்திருக்கிறேன்.
இந்த சிலியோ பாத்திரத்தை நான் ஏற்கிறேன். நான் செய்வதற்கு இதைவிட சிறந்த விஷயம் இங்கு
ஏதும் இல்லை. என்றார். அவர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். ஆனால் அவர் சொன்ன வார்த்தையின்
பொருளை பின்னாளில் நான் உணர்ந்தேன். உண்மையாகவே அவர் அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கிறார்.
அவரிடம் ஹாலிவுட்டின் கவர்ச்சி
தன்மை கிடையாது. தனக்குத்தானே நேர்மையாக தான் என்ன செய்யவேண்டுமோ அதனை மட்டுமே கவனமாக
செய்தார். தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என்னவோ அதனை அதற்கான மரியாதை குறையாமல் செய்தார்.
அவர் என்னுடைய படத்தில் நடித்ததை எனக்கு பெருமையாகவே கருதுகிறேன். அவர் மேலும் பல்வேறு
கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். சுயநலமின்றியே சொல்லுகிறேன்.
அவர் எந்த இயக்குநருக்கும் அவர் மிகச்சிறந்த பரிசு.
டைம்
அலெக்ஸாண்டர் குவாரோன்
கருத்துகள்
கருத்துரையிடுக