வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான சூழ்நிலையை இப்போதுதான் உருவாக்கி வருகிறோம்!
ஜிபி |
அஸ்வின் யார்டி
கேப்ஜெமினி இயக்குநர்
கேப்ஜெமினி 125000 ஊழியர்களுடன்
செயல்பட்டு வரும் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனம். அதன் இயக்குநர் அஸ்வின் யார்டியிடம்
பேசினோம்.
நீங்கள் பதவியேற்று பதினெட்டு மாதங்கள் ஆகிறது. இப்போதைய
நெருக்கடியான சூழலை எப்படி சமாளிக்கிறீர்கள்?
நாங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை
இங்கு நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயன்று வருகிறோம். இதற்கென தனி அதிகாரியை நியமித்து
செயல்பட்டு வருகிறோம். எங்களது சேவை சிறந்த முறையில் இருக்க பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு
இணைந்து பணிபுரிந்து வருகிறோம்.
உங்கள் நிறுவனத்தில் 96 சதவீத ஊழியர்கள் வீட்டில் பணிபுரியும்
அமைப்பில் உள்ளனர். இதைப்பற்றி கூறுங்கள்.
திறனை மையப்படுத்தி இந்த
கேள்வியை நீங்கள் கேட்டால் இப்போது அதனைப் பற்றி ஏதும் கூறமுடியாது. முன்னர் எங்கள்
நிறுவனத்தில் 20 சதவீதம்பேர் வீட்டிலேயே பணிபுரிந்து வந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை
90 சதவீதமாக கூடியிருக்கிறது. முன்னர் வீட்டில் பணிபுரிந்தவர்களுக்கு அடிப்படையான கட்டமைப்பு,
விதிகள் என்று ஒன்று கிடையாது. இன்றையை கொரோனா காலத்தில் நாம் அதனை உருவாக்கவேண்டியிருக்கிறது.
பகுதிநேரமாக பணிபுரிவதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?
வீட்டிலேயே பணிபுரிவதற்கு
முன்னர், பகுதிநேரமாக பணிபுரிவதை பலரும் ஏற்கவில்லை. இன்று இதனை ஏற்கத் தொடங்கியுள்ளனர்.
எங்கள் நிறுவனத்தில் இம்முறையில் பணியாற்றுபவர்கள் குறைவு. முழுநேரமும் அலுவலகமே கதி
என கிடக்கவ விரும்பாதவர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
ரகசியமான தகவல்களை எப்படி கையாள்வது? பணியாளர்களை அதில் பயிற்றுவித்துவிட்டீர்களா?
வேலையில் தகவல்களை வெளிப்படுத்துவது
கட்டுப்படுத்துவது கடினமாகவே இருக்கிறது.நாங்கள் இப்பணியில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம்.
பெருந்தொற்று காரணமாக பணிகள் ஏதாவது தடைபட்டுள்ளதா?
இதற்கு நேரடியான பதிலை கூறமுடியாது.
பெருந்தொற்று காரணமாக உற்பத்திதுறை, ஹோட்டல், சுற்றுலா ஆகிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் இதன் காரணமாக நிறைய பணிகள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஆன்லைன் வணிகத்திற்கான வாய்ப்பாகவும் இதனைக் கருதலாம்.
பிஸினஸ் ஸ்டேண்டர்ட்
பிகு ரஞ்சன் மிஸ்ரா
கருத்துகள்
கருத்துரையிடுக