சச்சின் பைலட் பேராசையோடு அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் இறங்கினார் - அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர்








ரூ.2,000 அறிமுகம் ஏன்? பிரதமருக்கு ...
அசோக் கெலாட் - தினமணி


அசோல் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர்

உங்கள் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று நம்புகிறீர்களா?

ஜனநாயக முறையில் எங்களின் பலத்தை நிரூபிக்க நாங்கள் தயங்க மாட்டோம். பெரும்பான்மையை நிரூபிக்க சொன்னால் நிச்சயமாக நாங்கள் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்கள் அரசு ஏன் திடீரென தடுமாறத்தொடங்கியுள்ளது. நிலையான அரசு போல தெரியவில்லையே?

இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள், எங்களது அரசின் செயல்பாடு சார்ந்தவை அல்ல. சச்சின் பைலட்டின் அதீத பேராசை காரணமாகவும், அதை நம்பியுள்ள எம்எல்ஏக்களாலும் ஏற்பட்ட பிரச்னை. இதனை மக்களின் நம்பிக்கையுடன் நாங்கள் வெல்வோம். மக்களின் ஆதரவுடன் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்வோம்.

நீங்கள் சச்சின் பைலட்டின் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது?

 அரசு ஏஜென்சிகள் இதுதொடர்பான விசாரணையில் உள்ளன. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வலைத்தளங்களில் அனைவரும் எளிதாக அணுக முடியும். கடந்த ஆறுமாதங்களாக இதுபற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம்.

இந்திய அரசியல் வரலாற்றில் எந்த மாநில அரசும் தனது ஆட்சியில் துணை முதல்வருக்கு எதிராக ஊழல் புகாரை பதிவு செய்தது இல்லையே?

நாங்கள் குதிரைபேரம் தொடர்பாக புகார்களை பதிந்துள்ளோம். இதில் நீங்கள் குறிப்பிடுவது போல யாருடைய பெயரையும் நாங்கள் குறிப்பிடவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும்.

உங்களது அரசு அமைந்ததும் பைலட்டிற்கு எதற்கு துணை முதல்வர் பதவி அளித்தீர்கள். அவருக்கு முக்கியமான துறையை வழங்கியிருக்கலாமே?

நீங்கள் உங்கள் மனதில் தோன்றிய கற்பனைப்படி இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். முக்கியமான துறைகள் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள். பைலட் வெறும் துணை முதல்வர் மட்டுமல்ல. அவரிடம்தன் பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ராஜ், கிராம மேம்பாட்டுத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, புள்ளியல் துறை அளிக்கப்பட்டிருந்தது. இதில் அவருக்கு வேறுபாடுகள் இருந்தால் அதனை தாராளமாக என்னிடம் அல்லது கட்சி தலைமையிடம் பேசியிருக்கலாமே?

நீங்கள் உங்கள் மகனை அரசியலில் கொண்டுவர முயல்வதாக கூறப்படுகிறதே?

நீங்கள் கூறுவது அடிப்படையே இல்லாத வதந்தி. இதனை எங்கள் கட்சியினர் மட்டுமல்ல எதிர்க்கட்சியினர் கூட நம்ப மாட்டார்கள்.

ராஜஸ்தானின் நீங்கள் முதல்வராக பதவியேற்றது முதல் பைலட் உங்களுடன் பேசவில்லை என்று கூறப்படுகிறதே?

நான் பேசிய விஷயங்களை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன. இதன் காரணமாக எங்கள் இருவரிடையே தகவல்தொடர்பு சரியாக அமையவில்லை. மேலும் அவர் பேராசை கொண்டு, அதற்கான நியாமற்ற செயல்களில் ஈடுபடத்தொடங்கினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

சி ஜி மனோஜ்

 


கருத்துகள்