ஆண்களின் வழுக்கைத் தலை அதிகரிப்புக்கு மரபணுக்கள்தான் காரணம்! - மிஸ்டர் ரோனி
மனிதர்களின் காது அமைப்பு வித்தியாசமாக இருக்கிறதே?
இந்த அமைப்பை டிரைகஸ் என்று
கூறுவார்கள். மிகப்பெரிய பயன் என்று இந்த அமைப்பில் ஏதும் கிடையாது. கேட்கும் ஒலியை
தெளிவாக ஊக்கப்படுத்தி உள்ளே அனுப்புகிற பணியை இந்த அமைப்பு செய்கிறது.
கண்களுக்கு கீழே கேரிபேக் போல கருவளையம் உருவாக என்ன காரணம்?
உடலில் ரத்த ஓட்டம் சரியாக
ஓடவில்லை என்று அர்த்தம். இது முதல் காரணம் என்று கொள்ளுங்கள். அடுத்து சரியான உணவு,
தூக்கம், முதுமை ஆகியவை அடுத்தடுத்த காரணங்கள். கண்களுக்கு கீழே கருப்பாக கேரிபேக்
போல மாறுவது, அதில் நீர் கோர்ப்பதால்தான்.
ஆண்களில் அதிகம் பேருக்கு வழுக்கை தலை ஏற்படுவது ஏன்?
இதை பெண்களை ஒப்பிட்டு கேட்க
நினைத்திருக்கலாம். அனைத்து பிரச்னைக்கும் காரணம் என பிரதமர் மோடி சொல்வது போல நாம்
ஹார்மோன், மரபணுக்கள் பக்கள் கைகாட்டுவதுதான் ஒரே வழி. இதில் டெஸ்டோஸ்டிரோன் உச்சமானால்
இந்த பாதிப்பு. அதேசமயம் இந்த ஹார்மோன் அளவு பெண்களுகு குறைவாக உள்ளது. அதனால் அவர்களுக்கு
தலைமுடி கொட்டி வழுக்கை ஆவது குறைவாக உள்ளது.
உடலில் சிராய்ப்பு ஏற்பட்டால் அது ஏன் நீலம் அல்லது மஞ்சள்
நிறமாக உள்ளது?
சைக்கிள் ஓட்டும்போது விழுந்து
வாரினால், பைக்கில் சென்று வழுக்கி விழுந்தாலோ கை, கால்கள் என சாலையில் உடல் தேயும்
அளவைப் பொறுத்து சிராய்ப்புகள் ஏற்படும். உடலிலுள்ள ரத்தசெல்களில் ஹீமோகுளோபின் உள்ளது.
இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் காரணமாகவே சிராய்ப்புகள் மஞ்சள் அல்லது கருநீலமாக
தோன்றுகின்றன. சிலருக்கு இதே நிறம் கொண்ட காம்பினேஷன்கள் மாறுபடலாம்.
இதயத்தின் லப் டப் ஒலி, இயக்கம் எப்படி உருவாகிறது?
இயல்பாகவே இதயம் இயங்கினால்தான்
ரத்த ஓட்டம் உடல் முழுக்க பாயும். இதனை கட்டுப்படுத்துவது சினோவாட்ரியல் மோட்(SAN)
எனும் அமைப்பு. இந்த அமைப்பு செயலிழந்தால்தான் இதயத்தில் பேஸ்மேக்கரைப் பொறுத்துகிறார்கள்.
இதயத்திலுள்ள லப் டப் சத்தம், அத்திசுக்களிலுள்ள கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகிய
வேதிப்பொருட்கள் மூலம் உருவாகும் மின்சாரம் மூலம் மாறுபடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக