கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்த கோல்ஃப் புலி! - டைகர் உட்ஸ்










Tiger Woods awarded Presidential Medal of Freedom: Donald Trump ...
டைகர் உட்ஸ்



டைகர் உட்ஸ்

கடந்த ஆண்டு டைகர் உட்ஸோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் எங்கள் குழந்தைகள் உலகை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றிப் பேசினோம். அப்போது எனது நான்கு வயது மகன் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கவனிப்பதாக கூறினேன். அதற்கு டைகர் உட்ஸ், தனது பிள்ளைகள் தான் கோல்ஃப் விளையாட்டில் வெல்வதை அவர்கள் பார்ப்பார்கள் என்று கூறினார்.

பதினொரு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உட்ஸ், தனது 15 வது பட்டத்தை வென்று சாதித்தார். அவரின் போராட்டம் எனக்கு பெருமையாக இருந்தது. சில ஆண்டுகளாகவே அவர் பல்வேறு அறுவைசிகிச்சைகளால் ஓய்வில் இருந்தார்.

பலமணி நேரங்களை உடற்பயிற்சி நிலையத்திலும், கோல்ஃப் மைதானத்திலும் செலவழித்தார். எங்கு 15 வது பட்டம் வென்றாரோ அதே மைதானத்தில் அவர் தனது அப்பாவை 22 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித்தழுவினார். ஆனால் இன்று அவர் வெற்றி பெற்றாலும் தனது பிள்ளைகளை கட்டித்தழுவ யாரும் அனுமதிக்கவில்லை. அவர் திரும்ப விளையாடி வெற்றி பெறுவது கடினம் என விளையாட்டு விமர்சகர்கள் கூறிய நிலையில் அவரது வெற்றி மகத்தானது. போராட்டங்கள் நிறைந்தவை. வலி நிறைந்தவை. தனது வெற்றி மூலம் விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தமாக பதில் கூறியிருக்கிறார்.

ஜஸ்டின் டிம்பர்லேக்


10 Things You Didn't Know about Lockheed Martin CEO Marillyn Hewson
மேரிலீன் ஹியூசன்

மேரிலீன் ஹியூசன்

வணிகத்துறையின் செயலராக நான் மேரிலீனின் வளர்ச்சியை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். அவர் இருபது ஆண்டுகள் கடுமையாக உழைத்து இன்று லோக்ஹீத் மார்ட்டின் நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்துள்ளார். தொழிற்துறை சார்ந்த பொறியியலாளராக பட்டம் பெற்றவர் இன்று இயக்குநராக சாதித்து, சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்து ஆண்களால் உருவான இடத்தை பெண்களாலும் நிரப்ப முடியும் என்று நிரூபித்துள்ளார்.

கான்சாஸில் பிறந்த மேரிலீன் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை, நாங்கள் இளமையிலேயே எங்கள் தந்தையை மாரடைப்பில் பறி கொடுத்துவிட்டதுதான். இதன்விளைவாக, அவரது அம்மா நிறைய வேலைகளைப் பார்த்து மேரிலீனை வளர்த்துள்ளார். இதனால் அவரிடம் பேசும்போது, எனக்கு தலைமைத்துவ தகுதியை, திறனை கற்றுக்கொடுத்தது எனது அம்மாதான் என்று எப்போதும் சொல்லுவார்.

அமெரிக்கர்கள் சுயசார்பான திறமைகளை கற்றுக்கொண்டு தொழில்துறையில் சாதிக்கவேண்டும் என்று பலருக்கும் வழிகாட்டியவர் மேரிலீன். அவர் அறிவியல் பிரிவை அதற்காகவே ஆதரித்து வருகிறார். இவரது பல்வேறு ஆக்கப்பூர்வ யோசனைகளால் தொழில்துறையோடு அவரது நிறுவனமும் வளர்ச்சி பெற்றது. ஓர் வணிக நிறுவனத் தலைவர் எப்படி சமூகத்திற்கு முன்னோடியாக விளங்க முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறார் மேரிலீன்.

பென்னி பிரிட்ஸ்கர் 

கருத்துகள்