சிறைவாசத்திலிருந்து மக்களை மீட்ட ஜனநாயகவாதி! - அபி அஹ்மத்
அபி அஹ்மத் |
அபி அஹ்மத்
2016இல் எத்தியோப்பியாவின்
நிலைமை படுமோசமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கானோர்
சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த உண்மையை உலகிற்கு சொல்லவே நான் முயன்றேன். இதற்காக
ரியோ ஒலிம்பிக்ஸ் பந்தய ட்ராக்கில் ஓடி முடித்ததும்
இரு கைகளை குறுக்காக கட்டி கைது செய்யவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிப்பது போல நின்றேன்.
ஆனால் அதற்குப்பிறகும் அங்கு கொலைகள் நிற்கவில்லை. என்னுடைய அம்மா, இரு ஆண்டுகளாக என்னோடு
பேசும்போது அங்குள்ள சூழ்நிலைகளைச் சொல்லியபடி அழுதுகொண்டே இருந்தார். கடந்த ஆண்டு
கென்யாவில் நான் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தபோது புதிய செய்தி ஒன்றைக் கேள்விப்பட்டேன்.
அபி அஹ்மத் என்ற கல்வி கற்றவர் புதிய பிரதமராகியிருக்கிறார் என்பதே அது. அவர் சிறைப்பட்ட
கைதிகளை விடுவித்தார். இருபது ஆண்டுகளாக எத்தியோப்பியா வரலாற்றில் நடக்காத விஷயம் அமைதி.
இருபது ஆண்டுகளாக போரிட்டு வந்த எரிட்ரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையில்
அமைதியைக்கொண்டு வந்தார் அபி அஹ்மத். இதன் காரணமாகவே நான் நாடு திரும்ப முடிந்தது.
இன்றும் எங்கள் நாட்டில்
மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிறைப்பட மாட்டார்கள். காரணம், எங்கள்
நாட்டில் இப்போது ஜனநாயகம் இருக்கிறது. அதுதான் எங்கள் நம்பிக்கையும் கூட.
டைம்
ஃபிஷா லில்லிஸா
கருத்துகள்
கருத்துரையிடுக