விமானங்களின் மாசுபாட்டைக் குறைக்கும் புதிய தொழில்நுட்பம்! - ஸ்வீடன் நாட்டின் சாதனை!
ஃபேமிலி டிராவலர் |
விமான சேவை மூலம் காற்றில்
கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது. இரண்டு ஜெட் எஞ்சின்கள் 2,721 கிலோகிராம் எரிபொருளை எரிப்பதன் மூலம் 8,618 கிலோகிராம் கார்பனை
காற்றில் உருவாக்குகின்றன. ஸ்வீடன்வாசிகள் இதனை ஃபிளைக்ஸ்காம் (flykskam) என்கின்றனர்.
சூழலுக்கு இழைக்கும் அநீதி என்கிறார்கள். கார்பன் சுவடின்றி விமான பயணங்களை செய்ய முடியும்
என்றால் நன்றாக இருக்கும்தானே?
”இது சாத்தியம்தான். நாங்கள்
சூரிய ஆற்றல் மற்றும் காற்று மூலம் பெறப்படும் எரிபொருளை பயன்படுத்தும்படி ஜெட் எஞ்சின்களை
வடிவமைத்துள்ளோம்” என்கிறார் ஸ்வீடன் தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்
ஆல்டோ ஸ்டெய்ன்ஃபீல்டு. சின்கேஸ் எனப்படும் எரிபொருளை காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை
ஈர்த்து ஆக்சிஜனுடன் வினைபுரிய வைத்து தயாரிக்கிறார்கள். இதற்கான சோலார் அமைப்பு, மேட்ரிட் நகரின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
15 மீட்டர் உயரமுள்ள கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மூலம்தான் சின்கேஸ்
தயாரிக்கப்படுகிறது. இதனை மண்ணெண்ணெய் மூலக்கூறாக மாற்றி ஜெட் எஞ்சின்களில் பயன்படுத்துகிறார்கள்.
மோஸ்டோல்ஸ் சுத்திகரிப்பு நிறுவனம், இக்கண்டுபிடிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது.
சூரிய ஆற்றல் மண்ணெண்ணெய்
தற்போது தயாரிக்கப்படும் முறையால் விலை அதிகமாக உள்ளது. வணிகரீதியில் பயன்படுத்தும்
விமான எரிபொருட்களுக்கு இணையாக வர இன்னும் காலமாகலாம். இதற்காக சூரிய ஆற்றலைப் பெறும்
அமைப்பையும் பெரிதாக அமைக்கும் நிர்பந்தம் இருக்கிறது. கடந்த மே மாதம், நெதர்லாந்தைச்
சேர்ந்த விமானநிலைய நிர்வாகம், கார்பன் டை ஆக்சைடை திரவ எரிபொருளாக பயன்படுத்த ஆதரவு
தெரிவித்திருந்தது. இதற்கான பணியை கிளைம்வொர்க்ஸ் நிறுவனம், 2009ஆம் ஆண்டிலிருந்து
செய்து வந்தது. “இம்முறையில் சூழல் பாதிப்படையாமல் நாம் விமானங்களை இயக்க முடியும்”
என்றார் ஆராய்ச்சியாளர் ஸ்டெய்ன்ஃபீல்டு.
தகவல்: டிஸ்கவர் இதழ்
நன்றி: தினமலர் பட்டம் நாளிதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக