விளையாட்டும் சமூக அர்ப்பணிப்பும் கொண்ட மகத்தான வீரர்! - லீப்ரோன் ஜேம்ஸ்






NBA Players on LeBron James (Kobe, Curry, Irving, Durant..) - YouTube
லீப்ரோன் ஜேம்ஸ் - யூடியூப்




லீப்ரோன் ஜேம்ஸ்

நான் ஜேம்ஸை பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அப்போது நாங்கள் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தை நடத்தும் முனைப்பில் இருந்தோம். அவருடன் நடந்த விளையாட்டில் நாங்கள் வென்றோம். அதற்கு முழு காரணம், அன்று எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்ததுதான். அப்போட்டியில் அவரது தலைமைத்துவ திறன்கள் எனக்கு நன்கு தெரிந்தன. புத்திசாலித்தனமான சிந்தனைகள் கொண்ட துடிப்பான வீரர். அவரின் திறமைக்கு நிச்சயம் வேகமாக செயல்படுபவர்களாக இருந்தால் ஆபத்தான வேறு முடிவுகளை எடுத்திருப்பார்கள். ஆனால் ஜேம்ஸ், தன்னை கட்டுக்குள் கொண்டு  வந்திருந்தார்.

அவர் தனது செயல்பாடுகளால் பல லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து  வந்தார். தன்னை பெரிய பிரபலமாகவே எப்போதும் அவர் அடையாளம் காணவில்லை. என்னை அவர் பார்க்கும்போது அவரது ஊரிலுள்ள ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி கட்டுவது பற்றி பேசினார். அதனை நான் ஏற்றேன். ஜேம்ஸிடம் என்னை ஈர்ப்பது, போட்டி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்போதும் முதலிலிருந்து தொடங்கலாம் என்ற வேட்கைதான்.

வாரன் பஃபட்


கருத்துகள்