தன் தந்தையின் கௌரம் காக்க காதலை கைவிடும் மகன்! - ஓய் நின்னே
ஓய் நின்னே 2017
இயக்கம் சத்யம் சல்லாகோட்டி
ஒளிப்பதிவு
இசை சேகர் சந்திரா
தந்தைக்கும் மகனுக்குமான
சீரற்ற உறவு ஏற்படுத்தும் விளைவுகள்தான் கதை.
அப்பா (சேகர்), பள்ளி தலைமை ஆசிரியர்.
ஊரிலுள்ள பலரையும் நல்ல வேலைக்கு அனுப்பி அவர்களை முன்னேற்றியவர். ஆனால் அவரது மகன்(விஷ்ணு (எ) விஷூ) அனைத்தையும் கெடுக்கிறவனாக இருக்கிறான். படிப்பில் சுமார், வெளியில் வம்பிழுப்பது,
அடிதடி, காதலர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது, அடிக்கடி ஊர்ப்பஞ்சாயத்தை கூட்டி அப்பாவை
அவமானப்படுத்துவது என நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதனால் அப்பாவுக்கு, பையன்
என்றாலே அலர்ஜியாகிறது. அவருக்கு ஆறுதலாக இருப்பது தங்கையின் மகள்தான்(வேதா (எ) அம்முலு). அவளை தனது வீட்டில்
வைத்து படிக்க வைக்கிறார். அப்பெண்ணை சுட்டிக்காட்டி பையனைத் திட்டுகிறார் அப்பா. இதனால்,
அத்தை பெண்ணுக்கும் முறை மாமனுக்கும் முட்டிக்கொள்கிறது. முறைமாமன் மனதில் அவள் மீது
காதல் இருந்தாலும் அதை எங்குமே காட்டிக்கொள்வதில்லை.
பெண் படித்துக்கொண்டே இருந்தால்
என்னாவது? அவளை முறை மாமனுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். அத்தைக்கும்
தனது மகளை அண்ணன் மகனுக்கு முடிக்க விருப்பம். அவரது கணவரும் அதற்கு ஓகே சொல்லுகிறார்.
ஆனால், அண்ணன் தன் மகன் ஒரு தறுதலை. அவனுக்கு உன் பெண்ணை கல்யாணம் செய்து வைத்து வாழ்க்கையை
கெடுக்கவேண்டாம். உறவுக்குள் வேண்டாம். வெளிச்சம்பந்தம் பாருங்க என்கிறார். குடும்பமே
அதிர்ச்சியில் ஆழ்கிறது.
அம்முலு முதலில் ஓகே
சொன்னாலும், விஷூவின் மனதிலுள்ள அன்பை உணர்ந்து தனக்கு அவரே சரி என முடிவுக்கு வருகிறாள்.
ஆனால் அதற்குள் திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிடுகின்றன. இந்த திருமணம் நடைபெற்றதா? இருவரும்
தங்களுக்குள் இருந்த அன்பை உணர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.
ஆஹா
உறவு, உணர்ச்சிகள் என நன்றாக
எடுத்திருக்கிறார்கள். சேகர் சந்திரா இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. ஒளிப்பதிவும் உள்ளூர்
அழகை அழகாக படம்பிடித்திருக்கிறது. தந்தை, மகன் என இருவரும் கருத்து வேறுபட்டாலும்
ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் இடம் அருமை. விவசாயம் செய்து வருமானம் கிடைத்தாலும்
அந்த வேலை அவமானமாக நினைக்கும் தந்தையின் எண்ணம் மாற, மகன் விவசாயம் செய்வது நெகிழ்ச்சியான
காட்சி.
ஐயையோ
கல்லூரி முதல்வர் தொடர்பான
காட்சிகள் காமெடி என்ற பெயரில் பொறுமையைச் சோதிக்கின்றன. கிராமத்தில் இளம்பெண்ணை வல்லுறவு செய்தவர்களுக்கு திருமணம் செய்வது ஏற்புடையதாக கூற முடியாது. ஆனால், அந்த சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு அதை தவிர வேறு வழியில்லை என்பதாக காட்டுகிறார்கள். அம்முலுவின் அக்கறை அவர்களின் வாழ்க்கை மீது அவ்வளவுதான் இருக்கிறது. விஷ்ணு அம்முலு மீது கொள்ளும் காதலுக்கு எந்த காட்சிகளும் இல்லை.
நெஞ்சமெல்லாம் காதல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக