ராணுவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரபு ஆட்சியாளர்! - மொகமது பின் சையத்
மொகமது பின் சையத் |
வில்லியம் பார் the guadian |
வில்லியம் பார்
அமெரிக்க அதிபர் டிரம்பினால்
பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி. நீதியையும் அதைச்சுற்றிய அரசியலையும் கவனமாக கையாண்டுவருகிறார்.
விதிகளை கவனமாக கடைபிடிக்கும் புத்திசாலியான வழக்குரைஞர் இவர். 1991-93 ஆண்டுகளில்
அட்டர்னி ஜெனராக வில்லியம் நியமிக்கப்பட்டார். அச்சமயங்களில் நாட்டின் பாதுகாப்பு,
உணர்ச்சிகரமான பல்வேறு வழக்குகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை மிக சாதுர்யமாக
கையாண்டு புகழ்பெற்றார். இதனால் தனியார் துறையில் இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது.
இப்போது மீண்டும் பொதுத்துறைக்கு
திரும்பியுள்ளார். அனைத்து ஊழியர்களையும் மதிப்பதோடு சரியான வழிமுறைகளை கடைபிடித்து
நீதியை வழங்குவார் என்று அமெரிக்கா இவரை நம்புகிறது. நீதி அனைவருக்குமானதாக வழங்கப்படும்,
ஜனநாயகம் வில்லியமின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என்றே மக்கள் நம்புகின்றனர்.
மொகமது பின் சையத்
ஐக்கிய அரபு நாடுகளை காலித்
பின் சையத் ஆளுகிறார். அவருடைய இளைய சகோதரர் மொகமது பின் சையத் அபுதாபியை ஆளுகிறார்.
இவர் இரானியர்களை வெறுப்பதோடு, கத்தார் மீதும் பகைமை கொண்டிருக்கிறார். இந்த பிரச்னைகளோடு
உள்நாட்டில் பல்வேறு சீர்த்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறார். ஏமனில் போரை நடத்துவது,
பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யும் விஷயத்தில் சவுதி அரேபியாவின் முகமது பின் சல்மானை
மொகமது பின்பற்றுகிறார். ராணுவம் சார்ந்த விஷயங்களுக்கு இவர் கொடுக்கும் முக்கியத்துவம்
அமெரிக்க அதிகாரிகளைக் கூட கிண்டலடிக்க வைத்துள்ளது. அவர்கள் இவரின் ராணுவ ஆசையினால்
அரபு அமீரகத்தை லிட்டில் ஸ்பார்ட்டா என்று அழைக்கின்றனர்.
ரியான் போஹ்ல்
கருத்துகள்
கருத்துரையிடுக