மக்களுக்காக வன்முறை களமான நாட்டை சீர்திருத்த முயலும் இடதுசாரி அரசியல்வாதி! - அம்லோ(Amlo)
மிட்ச் மெக்கானல்- பயோகிராபி |
மிட்ச் மெக்கானல்
அமெரிக்காவின் அலபாமாவில்
பிறந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. தற்போது அமெரிக்காவின் செனட்டராக இருக்கிறார்.
வாஷிங்டன் பல்வேறு சிதைவுகளை, குற்றச்சாட்டுகளை சந்தித்துவருகிறது. அமெரிக்காவில் கூடும்
மக்களவையில் ஜனநாயகத்தை காப்பாற்ற உழைத்து வரும் முக்கியமான தலைவர்களின் மிட்ச் மெக்கானலும்
ஒருவர். சில அரசியல்வாதிகளின் உழைப்பால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்மை
ஏற்படுகிறது என்றால் மிட்ச் மெக்கானல் மூலம் மக்களுக்கு நிறைய நன்மைகளை கிடைத்திருக்கின்றன.
மக்களுக்கு உதவும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேறுவதற்கு உதவிகளைச் செய்தவர் இவர்.
ஜான் போஹ்னர்
லோபஸ் ஆப்ரடார் - அம்லோ |
லோபஸ் ஆப்ரடார்
12 ஆண்டுகள் காத்திருந்து
மெக்சிகோவின் அதிபராகி இருக்கிறார் அம்லோ. அவரின் நீளமான பெயரின் சுருக்கம்தான் அம்லோ.
இடதுசாரி அரசியல்வாதி என்பதோடு எளிமை விரும்பியும் கூட. தனக்கு கொடுக்கப்பட்ட அதிபர்
மாளிகை லாஸ் பினோஸைக் கூட வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். தினசரி காலை ஏழுமணிக்கு
பத்திரிக்கையாளர்களை சந்தித்துவிடுவார் என நிறைய பிளஸ் விஷயங்கள் உண்டு.
தனது கட்சி உறுப்பினர்களை
முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இயங்கி வருகிறார். இவரது முழு கவனமும் அமெரிக்கா
அல்லது வெனிசுலா பற்றி கிடையாது. முழுக்க மெக்சிகோ சார்ந்து மட்டும்தான் யோசிக்கிறார்.
பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். ஒருமுறை அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் கூறும் ட்விட்டர்
பதிவுகளுக்கு நான் ஒவ்வொரு முறையும் பதில் சொல்லவேண்டுமா என மக்களிடமே கேட்டார். அதற்கு
ஆதரவாக ஒரு கரம் கூட எழவில்லை. அதுதான் என் மக்கள் என்று உடனே கூறினார் அம்லோ.
2006ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மெக்சிகோவில் வன்முறை காரணமாக 2 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
அம்லோ தனியாளாக நின்று மெக்சிகோவை
காப்பாற்ற முடியும் என்று எண்ணுகிறார். அதற்கேற்ப ஏராளமான திட்டங்களை வேகமாக அரங்கேற்றி
வருகிறார். இவரைப் போலவே முன்னர் முயன்ற பலரும் தோற்றுப்போயிருக்கிறார்கள். இந்த உண்மையை
அம்லோ எப்போது உணர்வார் என்று தெரியவில்லை.
ஜோர்ஜ் ரமோஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக