ஷூட்டிங்கிற்கு போகும்போது உங்களிடம் 70 சதவீத கதை இருக்கவேண்டும்! - கௌதம் மேனன்
gowtham |
தியேட்டரோ, ஓடிடியோ கதைதான் முக்கியம்!
கௌதம் வாசுதேவ் மேனன், திரைப்பட
இயக்குநர்
திரைப்பட இயக்கத்திற்கு
கல்வி தேவையா?
நான் பொறியியல் படித்தவன்.
சினிமா பற்றி கற்றுக்கொள்ள மேலும் சில ஆண்டுகளை செலவழிக்கவில்லை. உடனே இயக்குநரிடம்
சேர்ந்துவிட்டேன். இன்றைய இளைஞர்கள் சினிமா தொடர்பாக கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால்
சினிமா தொடர்பான பின்னணி இல்லை என்றாலும் கவலைப்பட அவசியமில்லை. சினிமா பற்றி ஆர்வம்
இருந்தால் போதும். ஏதேனும் ஒரு இயக்குநருடன் பணியாற்றியிருந்தால் போதும். நான் இந்த
தகுதியையே முக்கியமாக கருதுகிறேன்.
இன்று தொழில்நுட்பம் மூலம் எளிதாக படப்பிடிப்பை செய்துவிட
முடிகிறது. சினிமா செட்டில் என்ன அனுபவங்களை பெறமுடியும் என்று நினைக்கிறீர்கள்.
சினிமா செட்டில்தான் நீங்கள்
உங்களால் என்ன விஷயங்களைச் செய்யமுடியும். மக்களை தொடர்புகொண்டு வேலை செய்யமுடியுமா
என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். செட்டைப் பொறுத்தவரை நீங்கள் என்னதான் திட்டமிட்டு
விஷயங்களைச் செய்தாலும் நிறைய விஷயங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும். எடிட்டிங்கின்
போது இசை, படத்தொகுப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
ஓடிடி தளங்கள் சுதந்திரமான தளமாக உள்ளது. ஆனால் நிறையப்படங்கள்
தியேட்டர் வெளியீட்டிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி உங்கள் கருத்து
என்ன?
நான் தியேட்டரில் படம் வெளியிடப்படும்
அனுபவத்தை ரசிக்கிறேன். ஆனால் இனிமேல் வரும் காலத்தில் தியேட்டர், ஓடிடி தளங்கள் என
இணைந்தே இயங்கவேண்டியிருக்கும். இதில் நிறைய சிறிய படங்களை வெளியிடலாம். தியேட்டரோ,
ஓடிடி தளமோ நீங்கள் கதையில், காட்சியில் கவனமாக இருந்தால் படம் மக்களை ஈர்க்கும். அதற்கு
சாட்சிதான் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கேஜிஎஃப் திரைப்படம்.
கதை எழுதுவது, இயக்குவது என இரண்டுமே இயக்குநருக்கு முக்கியமா?
நீங்கள் கதையை நீங்களாக
தனி அறை ஒதுக்கி எழுதினால்தான் அதனை படமாக எடுக்க முடியும். நூறு சதவீதம் கதை எழுதாவிட்டாலும்
70 சதவீத கதையேனும் எழுதினால்தான் படப்பிடிப்பை நடத்த முடியும். உங்களை நம்பித்தான்
தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்கிறார். கதையின் நம்பிக்கையில்தான் நடிகர்களும் நடிக்க
முன்வருகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக