கோபக்கார ரவுடியும் , அவரின் பிடிவாதம் பிடித்த அன்புக்கு ஏங்கும் தங்கையும்! - தீ 2007







Dhee || Full Length Telugu Movie || Vishnu, Genelia, Srihari ...




தீ 2007

இயக்கம்: ஸ்ரீனி வைட்லா

திரைக்கதை: கோணா வெங்கட், கோபிமோகன்

இசை: சக்ரி


சங்கர் என்ற தாதாவிடம் வேலைக்கு சேரும்  பப்லு என்ற இளைஞன் அவரின் தங்கையைக் காதலித்து ரணகள சூழலிலும் கல்யாணம் செய்வதுதான் கதை. 


ஊரில் படித்துவிட்டு பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்துவிட்டு திரியும் பப்லுவைத் திருத்த அவரது தந்தை நாரயணன் ஒரு வேலை செய்கிறார். ஊரே மிரளும் சங்கர் என்ற தாதாவின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் வேலைக்கு அவரை அனுப்புகிறார். அங்கு பப்லு வந்தவுடன் அங்கிருக்கும் சூழலைப் பார்த்து மிரண்டாலும் தாதா தொழிலை டெக்னாலஜி மூலம் அப்டேட் செய்கிறான். இதனால் சங்கர் தாதாவின் அன்பை பெறுகிறான். மெல்ல அவரது தங்கச்சிக்கு ரூட் விடுகிறான். காதல் கிடைக்கிறது. அதனை அவன் எப்படி தக்க வைத்து கோபக்கார தாதாவையும் அவரது எதிரி பல்லுவையும் சமாளிக்கிறான் என்பதுதான் கதை. 

ஆஹா

படத்தில் ஹீரோ மஞ்சு விஷ்ணுவுக்கு சீரியசான பணி ஒன்றுமில்லை. காமெடியன்களான பிரம்மானந்தம், சுனில் ஆகியோரை ஒருங்கிணைப்பதுதான். விஷ்ணுவின் பைட்டைவிட காமெடி அவதாரம்தான் நன்றாக பொருந்துகிறது. அதற்கேற்ப அவரது அலுவலக நண்பராக வரும் சாரி எனும் நண்பராக பிரம்மானந்தம் வரும் காட்சிகளில் எல்லாம் கலகலக்க வைக்கிறார். 

ஐயையோ

ஒருவன் தன்னுடைய காதலையே மறைக்க முடியாது என்றபோது, கல்யாணத்தை எப்படி மறைப்பது? அதுவும் இருவரும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு எப்படி சகஜமாக இருக்க முடியும் என்பது கடினம். அதில் லாஜிக் இல்லை. சீனு வைட்லா படம் என்பதால் காமெடி கரைசேர்க்கிறது. 

காமெடி சண்டை

கோமாளிமேடை டீம் 




கருத்துகள்