தனியிசைப் பாடல்களுக்கான சிறப்பான நேரம் இதுதான்! - பாடகர், இசையமைப்பாளர் கார்த்திக்!
பாடகர் கார்த்திக் -prudsi |
கார்த்திக்
பாடகர், இசையமைப்பாளர்
பொதுமுடக்க காலம் உங்களைப் பொறுத்தவரை எப்படி இருந்தது?
அனைவருக்கும் கிடைத்த இடைவெளி
இது. என்னைப் பொறுத்தவரை நமது வாழ்க்கை எவ்வளவு எளிமையானது என்று புரியவைத்துள்ளது.
நான் ஆர்கெஸ்ட்ராக்களுக்கு குறிப்புகள் எப்படி எழுவது என்று பழகி வந்தேன். இந்த பயிற்சி
எனது புதிய பாடலுக்கு உதவியது. பொதுவாக பாடகர்களுக்கு பல்வேறு நாடுகளுக்கு சென்று பாடும்
வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பொதுமுடக்க காலத்தால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, நான் இசைக்கருவிகளைக் கற்கத் தொடங்கியுள்ளேன். டிரம்ஸை இப்போது இசைக்க பழகிவருகிறேன்.
நான் இந்த காலத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.
மீ டூ இயக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் நீங்களும்
குற்றச்சாட்டப்பட்டீர்கள் அல்லவா?
நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன்.
அது அவசியமானது.
நீங்கள் இந்த பாலியல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டியவர்கள்
நேரடியாக சந்திக்கிறேன் என்று கூறினீர்கள். அவர்கள் குற்றம் உண்மையாக இருந்தால் மன்னிப்பு
கேட்பதாக கேட்கிறேன் என்று சொன்னீர்கள். உண்மையில் என்னதான் நடந்தது?
நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன்.
எனது கருத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள்
என்று நினைக்கிறேன். நன்றி!
பாடகர் கார்த்திக் |
நீங்கள் பாடகராக இருந்து இசையமைப்பாளராக மாறியவர். உங்கள்
இசையில் பிறரைப் பாட எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அது கொஞ்சம் கடினமான முடிவுதான்.
நாம் உருவாக்கிய ட்யூன் என்றாலும் கூட அது சரியாக செட் ஆகும் என்று கூறமுடியாது. உங்களுக்கு
பாடல் பற்றிய ஐடியா இருந்தாலும், குறிப்பிட்ட பாடகர் குரல் மனதில் வந்தால் அவரையே பாட
வைக்கவேண்டியதுதான். ஆனாலும் கூட அந்த முடிவு கடினமானதுதான்.
தனியிசைப் பாடல்களை நீங்கள் பின்தொடர்ந்து வருகிறீர்கள்.
அதுபற்றிய செய்திகளை கவனிப்பவர் என்ற முறையில் அதன் எதிர்காலம் பற்றி உங்கள் கருத்து
என்ன?
முதலில் பாடகர்கள் பாடும்
திறமை இருந்தாலும் அதனை வெளிப்படுத்த சரியான ஊடகம் இல்லை. இன்று இணையம் அதற்கான வாய்ப்பை
வழங்கியிருக்கிறது. தனியிசைப்பாடல்களுக்கு இங்கு சந்தை இப்போதுதான் உருவாகி வருகிறது.
ஆல்பமாக பாடல்களை வெளியிட்டாலும் கூட அதில் பணம் கிடைக்காது என்பதுதான் குறை. ஆனால்
இப்படி பாடல்களை பாடி வந்தால், இளையராஜா முதல் ரஹ்மான் வரை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு
உள்ளது.
ஒன்ரேகா ஒரிஜினல் என்ற லேபிளில் நீங்கள் ஒரு சான்ஸ் கொடு
பாடலை வெளியிட்டிருந்தீர்கள்.
அது தனியிசைப் பாடல்கள்
என்ற வகையில் நான்காவது பாடல். கௌதமின் கனவு அது. நான், கார்க்கி, கெளதம் ஆகியோர் இப்பாடலை
உருவாக்கினோம். இதற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.
இதனை எப்படி உருவாக்கினீர்கள்? முதலில் பாடலுக்கான கான்செப்டா,
அல்லது பாடல் முதலில் வந்ததா?
முதலில் கௌதம் பாடலுக்கான
கான்செப்டை சொன்னார். அடுத்து கார்க்கி அழகான பாடல் வரிகளை எழுதினார். இதனால் அந்த
பாடலை சிறப்பாக நாங்கள் உருவாக்க முடிந்தது.
நான் உன் ஜோஸ்வா பாடலைப் பற்றி சொல்லுங்கள்.
அந்த பாடல் ஒருவர் மற்றொருவரிடம்
பேசும் தொனியில் எளிமையாக இருக்கவேண்டுமென சொல்லி எழுதப்பட்டது. விக்னேஷ் சிவன் எளிமையாக
நாங்கள் நினைக்கும்படி எழுதிக்கொடுத்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக