ரவுடிகள் எப்படி அரசியல் சக்தியாக உருவாகி வளர்கிறார்கள்? - கிரைம் ரிப்போர்ட்






Gangster, Mafia, Danger, Weapon
cc









ரவுடிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்?

அண்மையில் உ.பியைச் சேர்ந்த விகாஸ்துபே போலீசாரால் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டார். எப்போதும்போல போலீஸ் தரப்பில் சொல்லப்படும் புனைந்த கதை சிறப்பாக கூறப்பட்டது. இதை மையமாக வைத்து பின்னாளில் இந்தி திரைப்படங்கள் கூட உருவாகும். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் விகாஸ்துபே உருவான கதையில் உள்ளது.

பொதுவாக ரவுடிகள் தானாக உருவாகின்றார்களா? உருவாக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஒரே பாடலில் ஏழை பணக்காரர் ஆவதைப்போல ஐந்து ஸ்டெப்களில் இதனை சொல்லிவிடலாம்.

ஊரில், நகரில் உள்ள சிறிய ரவுடிகளை அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்குகளைப் பெற்றுத்தர வளர்த்துவிடுகின்றனர்.

அரசியல்வாதிகள், தங்களுக்கு தேவையான அனைத்து உருட்டல், மிரட்டல்களுக்கு ரவுடிகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பதிலுக்கு அவர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்குகிறார்கள். பிஸினஸ்மேன் படத்தில் மகேஷ்பாபு தன்னை ஷாயாஜி ஷிண்டே அவருடைய கீப் போல பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வார். ஆடம்பர வீடு, வங்கி இருப்பு, கார் என இவையும் இதில் அடங்கும்.

அரசியல்வாதிகளும், ரவுடிகளும் கைகோத்தபின் அவர்களுக்கு ஏற்றபடி நகரில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு ஏற்றபடி மனம் மாறி செயல்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

வெறும் பயத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதிகாரம் இருந்தால்தானே கெத்து? இப்போது நகரில் அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு மிரட்டல் ரவுடிகளைக் கொண்ட கிளைகளை ரவுடி தொடங்கி மாஃபியா தலைவராக மாறியிருப்பார். இனி உள்ளூர் அரசியலில் வெல்வதற்கான நடவடிக்கைகளை செய்வார்.

மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்காக அதிகாரப்பூர்மற்ற மாஃபியா குழுக்களை வைத்துதான் தேர்தல்களில் ஜெயிக்கின்றனர். சொத்துக்களை சேர்க்கின்றனர்.

மாஃபியா தலைவர்களின் முக்கியமான பணிகள்

கூலிப்படை வைத்து காசுவாங்கிக்கொண்டு ஆட்களை கொல்வது முதல் பணி.

பணயத்தொகை கேட்டு வசதியானவர்களின் வீட்டு பிள்ளைகளை கடத்துவது

நிலங்களை அபகரிப்பது

ஆயுத தாக்குதல்


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - சஞ்சய் பட்நாகர்

கருத்துகள்