கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் முன்னணிக்கு வரும் சீன ஆப்ஸ்கள்- இந்திய ஆப்ஸ்கள் வெல்லுமா?
1 |
2 |
zili by xiomi |
snake video |
முன்னணியில் சீன ஆப்ஸ்கள்!
டிக்டாக் தடை செய்யப்பட்டு
மூன்று வாரங்கள் ஆகின்றன. இதைப்பற்றி இரங்கல் பாட்டையும் சிவகார்த்திகேயன் அனிருத்
இசையில் எழுதிவிட்டார். இந்நிலையில் டிக்டாக்கின் இடத்தை பிடிக்க ஏராளமான இந்திய, சீன
ஆப்ஸ்கள் போட்டியிடுகின்றன. இம்முறையில் சீன ஆப்ஸ்கள், கூகுளின் பிளே ஸ்டோரில் டாப்
10 லிஸ்டில் இடம்பிடித்துவிட்டன என்பதுதான் முக்கிய செய்தி.
ஸ்னாக் வீடியோ, லைக்கி லைட்,
ஸில் என்ற மூன்று சீன வீடியோ ஆப்ஸ்கள்தான் அவை. அதிகம் தரவிறக்கப்படும் ஆப்ஸ்களில்
ஸ்னாக் வீடியோ, மோஜ் எனும் இந்திய ஆப்பின் பின்னால் உள்ளது. லைக்கி லைட் ஐந்தாவது இடத்திலும்,
ஸிலி ஆப், ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன. பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தின் ஆப்தான்
டிக்டாக். இந்தியாவில் தேசபாதுகாப்பு கருதி தடைசெய்யப்பட்டபோது, 200 மில்லியனுக்கும்
மேற்பட்ட பயனர்கள் இதற்கு இருந்தனர். உலகளவிலான தரவிறக்குதலில் இந்தியாவின் பங்கு
30 சதவீதம் ஆகும்.
இப்போது டிக்டாக்கின் பயனர்களை
குறிவைத்து இயங்கும் இந்திய வீடியோ ஸ்டார்அப்கள் இவை.
மித்ரோன், சிங்காரி, டிரெல்,
போலோ இந்தியா
கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம்
தரவிறக்கப்படும் ஆப்ஸ்கள்
மோஜ் – ஷேர்சாட்
ஸ்னாக் வீடியோ – குவால்ஷூ
டெக்னாலஜி
எம்எக்ஸ் டகாடக்- டைம்ஸ்
இண்டர்நெட்
ஜோஸ் – டெய்லிஹன்ட்
லைக்கி லைட் – பிகோ டெக்னாலஜி
ரோபோஸோ – இன்மொபைல்
ஷேர்சாட்
கூகுள்மீட்
ஸில்
ஜூம்
கருத்துகள்
கருத்துரையிடுக