ஆப்ரோ அமெரிக்கர்களின் இன்றியமையாத குரல்! - ட்ரீம் ஹாம்ப்டன்
ட்ரீம் ஹாம்ப்டன்
நான் ட்ரீம் ஹாப்டனை ஒரு
கதைசொல்லியாகவே நினைவுகூர்கிறேன். ஆம். அவர் அப்போது ஆப்ரோ அமெரிக்கர்களைப் பற்றி குரல்
கொடுத்த மிகச்சிலரில் ஒருவராக இருந்தார். 1995ஆம் ஆண்டு அது.
அவர் எடுத்த சர்வைவிங் ஆர்.
கெல்லி என்ற ஆவணப்படம் அவரின் லட்சியத்தை எனக்கு மட்டுமல்ல உலகிற்கே புரிய வைத்தது.
இந்த படத்தை பார்வையாளர்கள் பொழுதுபோக்காக முதுகை சீட்டில் சாய்த்து வைத்துக்கொண்டு
பார்க்க முடியாது. ஆப்ரோ அமெரிக்கர்களின் வாழ்க்கையை பார்க்கும் மக்களின் மனதில் காட்டுத்தீயாக
நினைக்க வைத்த படம் அது. டெட்ராய்டில் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளராள செயல்படும் ட்ரீம்
ஹாப்டன் நினைப்பது ஒன்றுதான். எந்தளவு சிக்கலான சூழ்நிலை வந்தாலும், அதனை நாம் சமாளித்து
மீண்டுவருவதற்கான மனநிலை கொண்டுள்ளோம் என்பதை மறக்க கூடாது. காரணம், ட்ரீம் ஹாப்டன்
நம் மீது அந்த நம்பிக்கை கொண்டுதான் செயல்பட்டு வருகிறார்.
டைம்
தரனா புர்கே
கருத்துகள்
கருத்துரையிடுக