ஓவியங்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு! - ஐஸ்வர்யா மணிவண்ணன்
aiswarya |
ஐஸ்வர்யா மணிவண்ணன்
ஓவியங்கள் மூலம் கொரோனா பாதிப்புக்கு உதவி!
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவெங்கும் தீவிரமாக பரவியுள்ளது. மக்களை பாதித்து, தொழில்துறையை முடங்க வைத்துள்ளது. இதனால் பலரும் பெரு நகரங்களை கைவிட்டு தங்களது சொந்த ஊருக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். வேலையில்லாத நாட்களில் உணவுக்கு இவர்கள் என்ன செய்வார்கள்? சில மனிதர்கள் உணவை விலையின்றி வழங்கி இவர்களின் பசிப்பிணி தீர்த்து வருகின்றனர்.
இன்றும் இந்திய ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகருகையில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தடுமாறி வருகின்றனர். இவர்களுக்கு எளிதாக உதவி செய்யும் வழியை ஐஸ்வர்யா கண்டுபிடித்துள்ளார். இவர்களின் பசிப்பிணியை நீக்க இவரின் வலைத்தளத்தில் உள்ள ஓவியங்களை வாங்கினால் போதும். இவரின் மைசா ஸ்டூடியோவில்(Maisha studio) வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்குவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 260 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“நாங்கள் ஜூன் 19க்கு முன்னரே 2.6 லட்ச ரூபாய் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியிருந்தோம். அப்போதுதான் சென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வந்ததால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் தேவைப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை செய்யமுடியாமல் போனது.” என்றார் ஐஸ்வர்யா. வலைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள இவரது ஓவியங்களின் தொடக்க விலை 6 ஆயிரம். பெரும்பாலான ஓவியங்கள் விற்கப்பட்டுவிட்டன. இவை, பொதுமுடக்கம் விலக்கப்பட்டவுடன் உரியவர்களுக்கு சென்று சேர்க்கப்படுமாம். ஐஸ்வர்யா தனது ஓவிய பணிகளோடு சேவைக்கரங்கள் என்ற அமைப்பிலும் செயல்பட்டு வருகிறார். இவரது மாணவர்கள் ஓவியப்பணிகளில் சிலர் உதவினர். நிவாரணப்பணிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
“கலையின் வலிமையை கல்வியாளராக, ஓவியராக நான் புரிந்துகொண்டுள்ளேன். என்னுடைய அமைப்பு சார்ந்த மாணவர்கள் இரவு பகலாக என்னுடன் நிவாரணப்பணிகளில் உழைத்தனர். அதனை மறக்க முடியாது. ஓவியங்களின் கலைத்தன்மையும், ஓவியர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்றும் அழியாது. அவை உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார் ஐஸ்வர்யா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக