கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்தும ரிசர்வ் வங்கி! - கூட்டுறவு வங்கிகள் வாழுமா? வீழுமா?
இந்து தமிழ் |
ஆர்பிஐயின் பிடியில் கூட்டுறவு வங்கிகள்!
கடந்த பிப்ரவரி மாதம், ரிசர்வ்
வங்கி கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
அளித்தது. ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டில் தலையிடுவதற்கு முக்கிய
காரணம் இருக்கிறது. மும்பையில் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு
வங்கி திவாலான செய்தியை அறிந்திருப்பீர்கள். போலி கணக்குகள் மூலம் ஹெச்டிஐஎல்
(HDIL) நிறுவனத்திற்கு 4,355 கோடி ரூபாய் கடன்தொகை, வழங்கப்பட்டிருப்பதை ரிசர்வ் வங்கி
கண்டுபிடித்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். சிலர் அதிர்ச்சியால்
இறந்தும்போனார்கள்.
இதுபோன்ற பொருளாதார குளறுபடிகளையும்,
சட்டவிரோத செயல்பாடுகளையும் தீர்க்கவே ரிசர்வ் வங்கி, நாட்டிலுள்ள 1,500 கூட்டுறவு
வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் மார்ச் மாதம், நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். வங்கி ஒழுங்குமுறைச்சட்டம்
1949 இன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குமுறைப்படுத்த அதிக அதிகாரம்
வழங்கப்படுகிறது என அப்போது தெரிவித்திருந்தார்.
நகரங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள
கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடிப் பேர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களது இருப்புத்தொகையாக
வங்கிகளில் 8.48 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. அதேசமயம் தனியார் வங்கிகளுக்கு நெறிமுறைகளை மட்டுமே ரிசர்வ்
வங்கி வழங்கிவருகிறது. அவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய வங்கிக்கு கிடையாது
என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது கூட்டுறவு வங்கிகளின்
தலைவர், இயக்குநர்கள் நியமனம், உறுப்பினர்கள் நியமனம், செயல்பாடு, பணப்புழக்கம் கணக்கு
வழக்கு தணிக்கை, கடன் வழங்குதல் என அனைத்தும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ்
வருகிறது. முன்னர் கூட்டுறவு வங்கி சங்கங்களும், ரிசர்வ் வங்கியும் கூட்டுறவு வங்கிகளின்
செயல்பாட்டை நெறிப்படுத்தின. இனி ரிசர்வ் வங்கியும், கூட்டுறவு வங்கிகளுக்கான பதிவாளரும்
வங்கிச் செயல்பாடுகளை நிர்வாகம் செய்வார்கள் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்
பிரகாஷ் ஜாவேத்கர் கூறியுள்ளார். சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்
கோவிந்த் ஒப்புதல் அளித்ததும் சட்டம் அமலுக்கு வரும். மேலதிக விவரங்களை அரசு இன்னும்
தெரிவிக்கவில்லை.
ரிசர்வ் வங்கியின் இந்த
நடவடிக்கையால் கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்திலிருந்து மீண்டு வளர்ச்சிக்கு பாதைக்கு திரும்ப
வாய்ப்புள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ்
நன்றி: தினமலர் பட்டம் நாளிதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக