இரண்டு மணிநேரத்தில் காதலை காதலியிடம் சொல்லி கவரமுடியுமா? பிரயாணம் 2009
பிரயாணம் 2009
இயக்கம்
சந்திரசேகர் யெலட்டி
திரைக்கதை: ராதாகிருஷ்ணா, சந்திரசேகர் யெலட்டி
ஒளிப்பதிவு சர்வேஷ் முராரி
இசை மகேஷ் சங்கர், மணிசர்மா
மலேசியாவின் கோலாலம்பூரில் சுற்றுலா பயணிகளாக வரும் இளைஞர்கள், அங்கிருந்து விமானநிலையம் வந்து சிங்கப்பூர் செல்ல நினைக்கிறார்கள்.ஆனால் அங்கிருந்து கல்யாண நிச்சயத்திற்காக ஹைதராபாத் செல்லும் இளம்பெண் ஹாரிகாவைப் பார்த்ததும் இளைஞர் கூட்டத்திலுள்ள இளைஞர் த்ருவுக்கு தலையில் லைட் எரிந்து மணி அடிக்க காதல் பிறக்கிறது. இரண்டே மணிநேரம். அதற்குள் அந்த பெண்ணை எப்படியாவது காதலில் வீழ்த்த வேண்டும். நிச்சயம் செய்த மாப்பிள்ளையை கழற்றிவிட்டு தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணை செய்யவைக்கவேண்டும். அந்த இளைஞர் என்ன செய்தார் என்பதுதான் கதை.
ஆஹா
மனோஜ் மஞ்சு, படு உற்சாகமாக நடித்திருக்கிறார். அதற்கேற்ப அவருடைய நண்பர்களும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்கள். பாயல் கோஷ் பாந்தமாக அழகாக இருக்கிறார். படத்தின் வசனங்களும், உற்சாகமான இசையும், பாடல்களும் ரசிக்கவைக்கின்றன. விமானநிலையத்தில் எப்படி காதல் நிறைவேறுகிறது என்பதுதான் இறுதிக்காட்சி. அதையும் சிறப்பாகவே எடுத்திருக்கிறார்கள்.
படத்தில் பெரியளவு சலிப்பே ஏற்படவில்லை. அந்தளவு படத்தின் காட்சிகள் ஜாலியாக அனுபவித்துப் பார்க்கும்படி இருக்கிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக