சிறப்பான கதாபாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளர்! - ரியான் மர்பி







The 20 Craziest TV Moments We Have Ryan Murphy to Thank For - E ...
ரியான் மர்பி இ ஆன்லைன் 




ரியான் மர்பி

என்னுடைய தொலைபேசி அலறுகிறது. எடுத்து பேசினால் மறுமுனையில் குரல் நான் ரியான் மர்பி பேசுகிறேன் என்கிறது. எனக்கு ரியான் மர்பியை அறிமுகம் கிடையாது என்று உறுதியாக சொல்லுவேன். அவர் டிவியில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர்.

டிவி நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுபவர், அதுபோன்ற நிகழ்ச்சி டிவிகளில் எப்போதும் வந்தது இல்லை என்று சொன்னார். அந்த கதாபாத்திரம் எனக்கு பெரும் புகழைப் பெற்றுத்தரும் என்று அவர் கூறிக்கொண்டே சென்றார். இதுபோன்ற வாக்குறுதிகளை நான் நிறைய கேட்டுவிட்டேன் என்பதால் அதனை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றதும், அவர் போனில் சொன்ன அத்தனை விஷயங்களும் தப்பாமல் நடந்தன. உண்மையில் அதனை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லைதான்.

ரியான் மர்பி அப்படிப்பட்டவர்தான். குழந்தை போல தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். யாரும் யோசிக்காத முறையில் யோசித்து ஐடியாக்களை சொல்லுவார். நம்மை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் நகைச்சுவை உணர்வைக் கொண்டவர் அவர்.

இவற்றை அனைத்தையும் தாண்டிய நட்புணர்வான இதயம் கொண்டவர். தான் நினைத்த கதாபாத்திரங்களை நடித்து காட்டி நடிகர்களை சிறப்பாக வேலை வாங்குவார். ஒவ்வொரு நடிகரின் வரம்புகளை மீறச்செய்து உள்ளிருக்கும் நடிப்பை பெறுவது எளிதல்ல. ரியானின் பணியே அதுதான். அவர் சிறந்த கதை சொல்லி. இன்று எனது மனதிற்கினிய நண்பராகவும் இருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் மர்பி, இயக்குநர் திரைக்கதை எழுத்தாளர். இவர் 1965ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தார். 

ஜெஸிகா லான்ஞ்


கருத்துகள்