நியூஸ் ரூம்: வளைகுடா நாடுகளை இணைக்கும் ரயில் திட்டம்!




சீனாவிலிருந்து கொரோனா பரவியதற்கான ...






அப்படியா?

சோதனை நிறுத்தம்

உலக சுகாதார நிறுவனம், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மருந்தாக கருதப்பட்ட குளோரோக்ஸிக்வின் சோதனைகளை நிறுத்தியுள்ளது. சோதனைக்கமிட்டி மலேரியாவுக்கான குளோரோக்ஸிக்வின், எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்படும் லோபினாவிர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகளின் சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இம்மருந்துகள் நோயாளிகளின் இறப்பைத் தடுக்கவில்லை என்பதால், இம்முடிவை சுகாதார நிறுவனம் எடுத்துள்ளது. பிற மருந்துகள் மீதான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

யுபிஐ

அட!

புதிய விதிகள்!

ஐரோப்பிய யூனியன், சுற்றுச்சூழலுக்கான புதிய விதியை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. இதில், 2050க்குள் பசுமை இல்ல வாயுக்களை பூஜ்ஜியமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ”இந்த ஆண்டுக்குள் இந்த சட்டத்தை யூனியன் நாடுகள் ஏற்றால், கார்பன் வாயுவை பெருமளவு குறைப்பதற்கான வாய்ப்புள்ளது” என்கிறார் ஆற்றல் துறை கமிஷனரான கத்ரி சிம்சன்.

இந்தியாடைம்ஸ்

ஐயையோ!

டிஜிட்டல் பீதி!

அரசு, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த தொடங்கியுள்ளதால், மாணவர்கள் 65 சதவீதம் பேர் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜெய்பூரைச் சேர்ந்த ஜே.கோ.லோன் மருத்துவனை 203 மாணவர்களிடம் எடுத்த ஆய்வில், மாணவர்கள் அழுவது, பிடிவாதம் பிடிப்பது என்ற அறிகுறிகளை டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதில் வெளிப்படுத்தினர். மருத்துவர் அசோக் குப்தா, தலைமையேற்று நடத்திய ஆய்வில் 70 சதவீத மாணவர்களுக்கு நடத்தை, குணம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா டைம்ஸ்


ஆஹா!

பிரமாண்ட ரயில் திட்டம்!

வளைகுடா நாடுகளை ஒன்றாக இணைக்கும் ரயில் திட்டம் 2023இல் தொடங்கவிருக்கிறது. சௌதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை ரயில்கள் மூலம் இணைக்கப்படவிருக்கின்றன. இரண்டாவது கட்டமாக, குவைத், பஹ்ரைன், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் இணைக்கப்படும். 2001ஆம்ஆண்டு இந்த இணைப்புத் திட்டத்தில் இருந்த கத்தார் இதில் இணைக்கப்படுமா என்று தெரியவில்லை. இந்நாட்டுடனான உறவை சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

Algae turns Italian Alps pink, prompting concerns over melting

Scientists in Italy are investigating the mysterious appearance of pink glacial ice in the Alps, caused by algae that accelerate the effects of climate change.There is debate about where the algae come from, but Biagio Di Mauro of Italy’s National Research Council said the pink snow observed on parts of the Presena glacier is likely caused by the same plant found in Greenland.“The alga is not dangerous, it is a natural phenomenon that occurs during the spring and summer periods in the middle latitudes but also at the Poles,” said Di Mauro, who had previously studied the algae at the Morteratsch glacier in Switzerland.

The guardian

 

கத்தார் நாட்டில் பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறி விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள காட்சி இது.

 

கருத்துகள்