இந்தியாவை மகிழ்விக்கும் தனிக்குரல் கலைஞர்கள் இவர்கள்தான்! - இணையத்தைக் கலக்கும் புதிய பிரபலங்கள்
1 |
bhargav |
kenny |
virdas |
praveen |
தனிக்குரல் கலைஞர்கள் இன்று
இணையம் எங்கும் பிரபலமாக உள்ளனர். தமிழில் அலெக்ஸ் பின்னி எடுப்பது போல இந்தியாவெங்கும்
தனிக்குரல் கலைஞர்கள் பல்வேறு தீம்கள் எடுத்து காமெடியில் மக்களை மறக்கவைக்கின்றனர்.
இதில் சினிமா போல பெரிய சென்சார் விஷயங்களை யாரும் செய்வதில்லை. உதாரணத்திற்கு வீர்தாசை
எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வடிவம் மேற்குலகு சார்ந்தது என்றாலும், வீர்தாஸ் இதனை இந்தியாவிற்கு
ஏற்றபடி சிறப்பாக மாற்றி வெற்றிகண்டிருக்கிறார்.
kanan |
மிஸ்டர் ஃபேமிலி மேன்
பிரவீன் குமார்
அமேஸான் ப்ரைம்
தமிழில் வரும் தனிக்குரல்
கலைஞரின் படைப்பு. நடுத்தர வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் ஒருமணி
நேரம் நிகழ்ச்சியாக செய்கிறார். பெரும்பாலானோர் வாழ்க்கைதான். அதிலுள்ள சுவாரசியத்தைக்
கண்டறிந்து பேசுவதுதான் பிரவீனின் கிரியேட்டிவிட்டி.
குங்பூ போண்டா
பேக்கி
அமேஸான் ப்ரைம்
பார்க்கவ் ராமகிருஷ்ணன்
என்பதுதான் பேக்கியாக சுருங்கிவிட்டது. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் 30 பிளஸ் ஆட்களின்
சந்தோஷம், கலவர விஷயங்களை நிகழ்ச்சியில் சுவைபட பேசுகிறார். பஞ்சகச்சம் கட்டி, போ டை
கட்டி வினோதமான வேடத்தில் பார்வையாளர்களுக்கு காட்சி தருகிறார். அசல் இந்தியாவைச் சேர்ந்த
காமெடியன் எனக்கு தேவை என்பவர்கள் இவரது நிகழ்ச்சியைப் பார்த்து மகிழலாம்.
வீர்தாஸ் ஃபார் இந்தியா
வீர்தாஸ்
நெட்பிளிக்ஸ்
இந்தியர்களின் வெள்ளை நிற
மோகம் தொடங்கி ஜாலியன்வாலாபாக் கொலை, தேசியகீதம், வாஸ்கோடகாமா, ஜின்னா, காந்தி என ஒருவரையும்
விடாமல் கலாய்த்து பங்கம் செய்கிறார். தான் பாட்னாவில் பார்லே ஜீ பிஸ்கெட்டிற்காக பாட்டியின்
மடியில் தலைவைத்து படுத்து கதை கேட்பது தொடங்கி நாஸ்டாலஜியா விஷயங்களையும் நறுக்கென்று
பேசுகிறார். வெளிநாட்டு பார்வையாளர்களுக்காக இந்திய உள்ளூர் விஷயங்களை சற்று விளக்கம்
கொடுத்து பேசும் தனிக்குரல் கலைஞன் இவர். வெளிநாட்டிற்கு இந்தியாவைப் பற்றி சிறப்பாகவே
அறிமுகப்படுத்துகிறார் என்று சொல்லவேண்டும்.
தி மோஸ்ட் இன்ட்ரஸ்டிங்
பர்சன் இன் தி ரூம்
கென்னி செபாஸ்டியன்
நெட்பிளிக்ஸ்
யூடியூப் சேனலில் காமெடி
செய்தவர் இப்போது நெட்பிளிக்ஸிற்கு ஜாகை மாற்றியிருக்கிறார். பெரும்பாலும் ரிகர்சல்
செய்யாமல் காமெடி செய்பவர் என்பதால் இவரை நிகழ்ச்சியில் பார்ப்பது இயல்பாக இருக்கிறது.
நெருப்புக்கோழி, சிறுத்தை, செருப்பு என எதை வைத்தாலும் இவரால் காமெடி செய்யமுடிகிறது.
காமெடி கலாசாரம் பற்றி இந்தியாவில் புராஜெக்ட் செய்தால் கென்னியை குறிப்பிடாமல் இருக்கவே
முடியாது.
யுவர்ஸ் சின்சியர்லி
கனன் கில்
இவரும் யூடியூபில் பல்வேறு
வைரல் வீடியோக்களை பதிவிட்டு காமெடி செய்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்தான். தற்போது
நெட்பிளிக்ஸில் இவரது நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன. அமேஸானில் நிறைய நிகழ்ச்சிகளை செய்து
கொடுத்திருக்கிறார். சின்ன வயதில் நிறைய லட்சியங்கள் மளிகைக்கடை லிஸ்ட் போல மனதில்
முண்டியடிக்கும் அல்லவா? அந்த வேடிக்கையான விஷயங்களைப் பற்றி நிகழ்ச்சியில் பேசுகிறார்.
சொந்த சமாச்சாரம்தான். ஆனால் சுவாரசியமாக இருக்கிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கோபிநாத் ராஜேந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக