சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியை உயரத்திற்கு கொண்டு சென்றவர்! - ஸாங் கெஜியன்
ஸாங் கெஜியன் - யூட்யூப் |
ஸாங் கெஜியன்
விண்வெளி ஆராய்ச்சியில்
அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதற்குப்பிறகு
குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்த நாடுகள் குறைவு. இதில் சீனா கடந்த ஆண்டுதான் தனது
செயல்பாடுகளைத் தொடங்கியது. அதற்கு ஸாங் கெஜியனின் பணிகள் முக்கியமானவை.
சீனா விண்வெளி ஆராய்ச்சி
மையத்தில் இயற்பியலாளராக பணியாற்றுகிறார் ஸாங். இவரின் முயற்சிகளால் புவியின் வட்டப்பாதையில்
பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்த தொடங்கியது சீனா. 2019ஆம் ஆண்டு நிலவின் மறுபுறத்திற்கு
சாங் 4 என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. இதுதான் உலக நாடுகளுக்கு சீனா வளர்ந்துவரும்
தன்மையை எடுத்துக்காட்டியது. சீன விண்வெளி ஆராய்ச்சி மையம், இப்போது டஜன் கணக்கிலான
விண்வெளித்திட்டங்களை குறித்து வைத்துக்கொண்டு பரபரவென வேலை பார்த்து வருகிறது. செவ்வாய்,
வியாழனுக்கு அனுப்பும் விண்கல பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. ஸாங்கின் முயற்சியால்
அமெரிக்காவின் நாசாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாசாவின் தொழில்நுட்ப
உதவி கிடைத்தால் உலக நாடுகளுக்கும் அது முக்கியமான உதவியாக இருக்கும்.
ஸ்காட் கெல்லி
கருத்துகள்
கருத்துரையிடுக