2031இல் சூழல் பயங்கரவாதம் அதிகரிக்கும்! - 2031இல் சூழல் அமைப்புகளும், தொழில்களும்





EcoTerrorism, EcoMadness | The Lukewarmer's Way





2031இல் சூழல் எப்படி இருக்கும்?

அப்போது உலகில் கார்பன் டை ஆக்சைடு அளவு 443பிபிஎம்மாக உயர்ந்திருக்கும். வெப்பநிலை 1.5டிகிரி செல்சியசிற்கும் அதிகமாகியிருக்கும்.

உலகளவில் பூமி பாதுகாப்பு படை என்ற ராணுவப்படை உருவாகியிருக்கும். இந்த அமைப்பு, உலகளவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது தீவிரமான தாக்குதலை தொடுக்கும். நேரடியாகவும் சரி, இணையத்தாக்குதல்கள் அளவிலும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவில் குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இணையம் மூலமாக தாக்குவார்கள். இயற்கை மீது தாக்குதல் நடத்தினால், பூமி எப்படி தாக்குதல் நடத்தும்? அதற்காகவே அதன் சார்பில் நாங்கள் தாக்குகிறோம் என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள். தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்புகளைப் போல பெருமையாகப் பொறுப்பேற்பார்கள். பிற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை எடுத்துகொண்டு அவர்கள் ஏற்படுத்தும் மாசுபாடு பற்றிய விவரங்களை மக்களுக்கு மாற்றி மாற்றி சொல்லுவார்கள். பின்னர் எண்ணெய் நிறுவனங்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்துவார்கள். இந்த தாக்குதல், பூமி விடுதலை முன்னணி என்ற அமெரிக்க அமைப்பு 1990களில் நடத்தி 100 மில்லியன் சேதம் விளைவித்தது போலவே நடந்தேறும். பூமி பாதுகாப்பு படை, எழுபதில் தொடங்கிய பிற இயற்கை பாதுகாப்பு இயக்கங்களின் செயல்பாடுகளை போற்றும். 1979ஆம்  ஆண்டு தொடங்கிய ஷெப்பர்டு கடல் பாதுகாப்பு போன்ற இயக்கங்களை புகழ்ந்து அதன் வழியே செல்லும். இவர்கள் இறால்கள், திமிங்கலங்களை வேட்டையாடுபவர்களின் கருவிகளை பிடுங்கி கொண்டு சென்றுவிடுவார்கள். 1981ஆம்ஆண்டு தொடங்கிய ஈகோ ஃபர்ஸ்ட் என்ற அமைப்பு மரங்களை வெட்டுபவர்களை கடுமையாக தாக்கி அவர்களின் கருவிகளை உடைத்தெறியும் செயல்பாடுகளுக்கு புகழ்பெற்றவர்கள். இப்படி செய்த செயல்பாடுகளின் எண்ணிக்கை 2001 இல் மட்டும் 163 என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அடுத்து வரும் ஆண்டுகளில் விலங்கு வதை, சூழல் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களே அதிகமாக பார்க்கவேண்டியிருக்கும் என்று எஃப்பிஐ அறிக்கைகள் கூறுகின்றன. இனிவரும் காலங்களில் கடல்களில் எரிபொருளை எடுக்கும் நிறுவனங்களின் மீது ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசும் நடவடிக்கைகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

2030இல் சூழல் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களை சொல்ல தனி எண்ணை அமெரிக்கா அறிவிக்கும். மறைமுகமாக செயல்படும் சூழல் அமைப்புகளை கண்டறிய மறைமுகமான காவல்துறை அதிகாரிகள் அதில் பணிபுரிய வாய்ப்புண்டு.  சூழல் தலைவர்கள், பெருநிறுவனங்களின் மாசுபாடு தொடர்பான திட்டங்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்துவார்கள். அதன் பங்கு விலைகளை குறைக்க முயல்வார்கள். சூழல் தீவிரவாதிகளின் கருத்தியல்களை பிடித்து தொங்கியவர்கள், மெல்ல வெளியேயுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அந்த அமைப்பிலிலிருந்து வெளியே வருவார்கள். அதனால் அந்த கருத்தியல் பலமிழக்கும்.

 

தி எகனாமிஸ்ட்

 


கருத்துகள்