துருவக்கரடிகளை கண்டறிய இன்ஃப்ராரெட் கதிர்கள் உதவாது! மிஸ்டர் ரோனி



Question Mark, Punctuation Marks, Question, Request







பல்லிகளால் நீர்நிலையில் நடக்க முடியும்.

அனைத்து பல்லிகளுக்கும் இது சாத்தியமில்லை. மத்திய தெற்கு அமெரிக்காவில் காணப்படும் பாசிலிஸிக் வகை பல்லிகள் நீர்நிலையில் நடந்து செல்கின்றன. இவை நீர்நிலையின் மீது ஏற்படுத்தும் விசையால் குமிழிகள் எழுகின்றன. இதனைப் பயன்படுத்தி முழுகாமல் நீர்நிலையின் மீது செல்கிறது.

நுரையீரலின் அளவுக்கு டென்னிஸ் மைதானத்தை ஒப்பிடலாமா?

70 சதுர மீட்டர் அளவுக்கு இதன் திசுக்கள் வரும். டென்னிஸ் மைதானத்தை விட கொஞ்சம் சிறியது. மூச்சுக்காற்றில் பெறும் ஆக்சிஜனை உடலிலுள்ள ரத்த செல்களுக்கு அனுப்பும் பணியை நுரையீரல் செய்கிறது. அதேநேரத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. காற்றைப் பிரித்து அனுப்பும் திசுக்கள் சாதாரண காகிதத்தை விட மென்மையானவை.

இன்ஃபிராரெட் கேமராக்கள் மூலம் துருவக்கரடிகளை கண்டறிய முடியுமா?

கடினம். பிரச்னை இன்ஃப்ராரெட்டில் இல்லை. துருவக்கரடிகளின் தோல் அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தெர்மல் கேமராக்கள் மூலம் இவற்றைக் கண்டறிய முடியாது. உடலின் வெப்பத்தை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதால்தான் அவற்றால் துருவப்பகுதியில் வாழ முடிகிறது.

காம்பஸால் நாம் திசையறிவது எப்படி?

காரணம் பூமியின் ஆழத்திலுள்ள திட, திரவ நிலையிலுள்ள இரும்பு காரணமாகத்தான். இதில் வெப்பநிலை காரணமாக மின்சாரம் உருவாகிறது. பூமியின் சுழற்சியில் இந்த மின்சாரம் காந்தவிசையை உருவாக்குகிறது. இதுதான் காம்பஸை இயக்க வைக்கிறது.

 

 

 


கருத்துகள்