விவசாயிகளின் பொருட்களை விற்க உதவும் தானிய வங்கி! - பீகார் தொழில்முனைவோரின் சாதனை
கிஷோர் குமார் ஜா - தானியவங்கி |
பீகாரைச்சேர்ந்த கிஷோர்
ஜா, பிரவீன் குமார் ஆகிய இரு இளைஞர்கள், எர்கோஸ் நிறவனத்தின் மூலம், விவசாயிகளுக்கான
தானிய வங்கியைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் அறுவடையான தானியங்களைப்
பற்றிய விவரங்களை சேகரித்து அளிப்பதோடு, அதனை நல்ல விலைக்கு விற்கவும் உதவுகின்றனர்.
எர்கோஸ் நிறுவனம், தொடங்கப்பட்டு
கடந்த ஐந்த ஆண்டுகளில் ஏராளமான விவசாயிகளுக்கு நம்பிக்கை தந்துள்ளது. ”இந்தியாவில்
உள்ள சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான
பயிர்களை இவர்கள் விளைவிக்கிறார்கள். தானியங்களை விளைவித்தால், 40 முதல் 50 குவிண்டால்கள்
வரும். ஆனால் இவர்கள் அத்தானியங்களை பெரிய மண்டிகளிலோ, சந்தையிலோ விற்பதில்லை. இதனால்,
குறைந்த வருமானம் பெற்று வந்தனர். இவர்களுடைய பொருட்களுக்கு சரியான விலை கிடைத்தால்
உற்சாகம் பெறுவார்கள் என நினைதோம்” என்கிறார் எர்கோஸ் நிறுவன இயக்குநர் கிஷோர் ஜா.
விவசாயிகளுக்கு கடன் வழங்குவது,
அவர்களின் தானியங்களை பாதுகாத்து வைக்கும் சரக்கு கிடங்கு வசதி, சந்தைகளின் விலை நிலவரங்களை
அறியத்தருவது ஆகியவற்றை எர்கோஸ் நிறுவனத்தினர் செய்துவருகின்றனர். தற்போது அறுபது இடங்களில்
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
”அடுத்து, நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்கி அறுவடைக்கு பிறகான
செயல்பாடுகளை விவசாயிகளோடு இணைந்து செய்ய உள்ளோம்” என்கிறார் கிஷோர் ஜா. தற்போது இவர்களின்
ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஆவிஷ்கார் எனும் நிறுவனம் 35 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஓராண்டில்
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க முடியும் என்ற நோக்கத்தை வெளிப்படையாக அறிவித்தே
எர்கோஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தகவல்: ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
வெளியீடு: தினமலர் பட்டம் நாளிதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக