படப்பிடிப்புகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கடினம்! - இயக்குநர் அனுபவ் சின்கா




இயக்குனர் அனுபவ் சின்ஹா ...
அனுபவ் சின்கா - தமிழ்க்குரல்




அனுபவ் சின்கா

இந்தி திரைப்பட இயக்குநர்

நீங்கள் அடுத்த படத்தை ஆயுஷ்மான் குரானாவுடன் செய்யப்போகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம்.

ஆம். அடுத்த படத்தை காடுகளில் படம்பிடிக்க பேசி வருகிறோம். படப்பிடிப்பிற்கான இடத்திற்காக அருணாசலப்பிரதேசம் சென்று வந்தேன். உடனே படப்பிடிப்பை தொடங்க முடியாது என்று நினைக்கிறேன். முடிந்தளவு விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம் என்று நினைக்கிறேன்.

திரைத்துறையில் அமிதாப் பச்சன் போன்றோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது எப்படி துறையில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது?

எங்கள் வீட்டில் 88 வயதான எங்கள் தந்தை இருக்கிறார் எனக்கு பதற்றமாக இருக்கிறது. மேலும் இனிவரும் ஆண்டில் படப்பிடிப்புகள் சானிடைசர், முக கவசங்கள், சமூக இடைவெளி ஆகிய விஷயங்களுடன் நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. இந்த ஆண்டு இப்படியேதான் முடியும் என்று நினைக்கிறேன்.

பொதுமுடக்க காலத்தில் ஏதேனும் எழுதினீர்களா?

இக்காலகட்டத்தில் நீங்கள் சரியான மனநிலையுடன் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. நான் வீட்டிலுள்ள சோபாவில் மாறி மாறி உட்கார்ந்துகொண்டுதான் முல்க் படத்தின் கதையை எழுதினேன். தற்போது எழுதியுள்ள கதையை முழுமையாக்க மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. முன்னர் எழுதி முல்க் கதையை நான் மூன்று நாட்களில் எழுதிவிட்டேன்.

நீங்கள் இந்தி திரைப்பட உலகில் உள்ள நடைமுறைகளைப் பற்றி எழுதிய பதிவு அனைவராலும் அதிகம் பகிரப்பட்டது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் உண்மைகளைச் சொல்லியது பலருக்கும் பிடித்திருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லுவது நிறைய பிரச்னைகளையும் உள்ளே அழைத்து வரும். இப்போதும் இந்தி திரைப்பட உலகம் தனக்கு ஏற்றாற்போல குறிப்பிடத்தக்க முன்னுரிமைகளுடன்தான் இயங்கி வருகிறது. நான் சில உண்மைகளை கூறவே நினைத்து அந்த பதிவை எழுதினேன்.

இந்தியா டுடே

சுஹானி சிங்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்