சைக்கோ கொலைகாரனை கிராமத்து மக்கள் விடுவித்தார்களா? கால் ஆப் தி ஹீரோஸ்!







The1AndOnlyTONY: Ngai sing (Call of heroes) movie mini-review





கால் ஆப்  ஹீரோஸ்

சீனா

இயக்கம்: பென்னி சான்

  • திரைக்கதை

  •  Benny Chan
  • Doug Wong
  • Tam Wai-ching
  • Tim Tong
  • Chien I-chueh

ஒளிப்பதிவு Pakie Chan

இசை Wong Kin-wai

கிராமத்தை அழிக்க வரும் மன்னரின் படைகளை சமாளித்து, அவரின் மகனுக்கு பாடம் புகட்டும் கிராமத்து மக்களின் கதை. 


பியூசெங் என்ற கிராமத்திற்கு நகரத்திலுள்ள பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை அரும்பாடுபட்டு வருகிறார். அங்கு வரும்போது உணவகம் ஒன்றில் மங்கி கிங் என்ற வீரனைப் பார்க்கிறார். பயணிகளை மிரட்டி பணம் பறிப்பவர்களை அடித்து துவைக்கிறான். இதனால் அவனது உதவியைப் பெற்று மாணவர்களை தலைநகருக்கு கொண்டு சென்று சேர்க்க உதவி கோருகிறார். ஆனால் அவன் அதற்கு மறுத்து விடுகிறான். ஆசிரியை தன் கையிலிருந்த பணத்தை வைத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து, பியூசெங் கிராமத்திற்கு செல்கிறார். அங்கு ஆசிரியையின் உறவினர் வாழ்ந்து வருகிறார். அவள் அவரின் உதவி கோரும் சமயம், அங்கு எதிரிகளின் படை வரவிருக்கும செய்தி கிடைக்கிறது. 

குற்றம் என்றால் தண்டனை என்ற கொள்கை கொண்ட கிராமத் தலைவர் நம்பிக்கை அளித்தாலும் அங்கு படைகளை சமாளிக்கும் திறன் கொண்ட ஆட்கள் கிடையாது. ஒருநாள் ஆசிரியை யாருக்காக பள்ளியை விட்டு குழந்தைகளை மீட்டுக்கொண்டு வந்தாளோ, அந்த கொடூரன், மன்னரின் மகன் அந்த கிராமத்திற்கு அவர்களைத் தேடி வருகிறான். வேறு எதற்கு? மிச்சமுள்ள உயிர்பிழைத்த பிள்ளைகளை கொல்லுவதற்குத்தான். இந்த போராட்டத்தின் ஆசிரியை, அவளது உறவினரான உணவகம் நடத்துபவர், கிராமத்தைச்  சேர்ந்தவர் என மூன்று பேர் இறக்கிறார்கள். அவர்களை மன்னரின் மகன் சுட்டுக்கொல்கிறான். இதற்காக கிராமத்து தலைவர் அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறார். அப்போது அவர்கள் கிராமத்தை குற்றவாளியின் ராணுவப்படை சூழ்கிறது. மன்னரின் சைக்கோ மகன்தான் அந்த ராணுவப்படையில் தலைவர். சிம்பிளாக அவன், நாளை காலை வரை உங்களுக்கு நேரம் இருக்கிறது, என்னை விடுவியுங்கள் அல்லது விடுவிக்காமல் போங்கள். நாங்கள் இந்த கிராமத்தை அடியோடு அழிப்போம் என்கிறான். 

கிராமத்தலைவர் மன்னரின் மகனை தேடிவரும் ராணுவ அதிகாரிகளுக்கு ஒரு பதில் தருகிறார். எங்கள் மக்களில் மூன்று பேரை அவர் கொன்றுவிட்டார். அவருக்கு மரணதண்டனை நாளை காலை நிறைவேற்றுகிறோம் என்கிறார். ஆனால் அவர்கள் அவரை எச்சரிக்கின்றனர். படைத்தலைவரை விடுவிக்காவிட்டால் நாங்கள் கிராமத்தை அழிப்போம் என்கிறார்கள். கிராமத்தை சேர்ந்த பணக்காரர் கிராமத்தலைவரை அடியோடு வெறுப்பவர். அவர் ராணுவப்படை தலைவரை விடுவித்துவிடலாம் என்கிறார். ஆனால் படைத்தலைவர் அது சாத்தியமில்லை. மூன்றுபேர் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு என்ன நீதி? என்கிறார். 

மன்னரின் மகன் கொடூர கொலைகாரன் கொல்லப்பட்டானா? அந்த சிறிய கிராமம் எப்படி ராணுவத்தை சமாளித்தது என்பதுதான் மீதிக்கதை. 


அதிக ஆக்சன் காட்சிகள் கிடையாது. எனவே சண்டைப்படம் என நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். படம் முழுக்க நெகிழ்ச்சசியான உணர்வுகள், கீழ்படிதல் , அரசு, நீதி, நேர்மை, தலைவன் எப்படி இருக்கவேண்டும், மக்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான காட்சிகள் நிறைய உள்ளன. அவற்றை நன்றாகவும் எடுத்திருக்கின்றனர். இறுதிக்காட்சியில் வரும் ஓயின் பானை மீது நடைபெறும் சண்டைக்காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. 

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்