அமெரிக்க சாசர் விளையாட்டை உயரத்துக்கு கொண்டுபோன வீராங்கனை! - அலெக்ஸ் மோர்கன்
அலெக்ஸ் மோர்கன் |
அலெக்ஸ் மோர்கன்
சாசர் விளையாட்டில் மோர்கன்
காட்டும் வேகமும், துணிச்சலும், புத்திசாலித்தனமும் அவரது விளையாட்டு மீதான காதலை அனைவருக்கும்
சொல்லும். அவரின் சிறப்பான ஆட்டத்திறனும், அணிவீரர்களுக்கு இடையிலான உறவும்தான் நான்கு
ஆண்டுகளுக்கு பிறகு அவரது அணி கோப்பை வெல்ல முக்கியமான காரணம்.
31 வயதாகும் மோர்கன், தனது
அணிக்கு அளிக்கும் உழைப்பும், பிற வீரர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்போடு விளையாடும்
விளையாட்டு அற்புதமானது. மோர்கன் இதே வேகத்தில் விளையாடினால் அவர் நிறைய வெற்றிகளை
அணிக்கு பெற்றுத்தர வாய்ப்புள்ளது. பனிரெண்டு வயதாகு இரட்டையர்களை பெற்றவர், நிச்சயம்
அடுத்த தலைமுறைக்கு முக்கியமான ஊக்கமூட்டியாக இருப்பார் என்று நிச்சயம். அமெரிக்க அணியின்
வெற்றிக்கு மோர்கன் அளிக்கும் உற்சாகம் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன்.
மியா ஹாம்
முகேஷ் அம்பானி |
முகேஷ் அம்பானி
திருபாய் அம்பானி, இந்தியாவில்
தொழில் குழுமத்தை நிறுவனர். அவரின் மூத்த மகன் முகேஷ் அம்பானி அதனை தன் தந்தையின் ஆசிர்வாதத்துடன்
பிரமாண்டமாக வளர்த்து செல்கிறார். பல்வேறு துறைகளிலும் தனது காலடியை பதித்துள்ளார்.
இவரின் மகத்தான வெற்றி ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை மூலம் சாத்தியமாகி உள்ளது.
இதனை அப்படியே தனது சில்லறை விற்பனையகங்கள், சிறப்பங்காடிகள் என அனைத்துடன் இணைத்துள்ளார்.
இவரது மகள், மகன் என இளைய தலைமுறை புதிய தொழில்களை சிறப்பாக கவனித்து மேம்படுத்தி வருகின்றனர்.
இதனால் இத்துறையில் உள்ள பிளிப்கார்ட், அமேஸான் ஆகிய நிறுவனங்களுக்கு வலுவான போட்டியாளராக
உருவாகியுள்ளது ரிலையன்ஸ்.
இத்தொழில் மட்டுமல்லாது
ஊடகச் சேவையிலும் ரிலையன்ஸ் உள்ளே நுழைந்து பிராந்தி பத்திரிகைகள், ஊடகங்கள் வாங்கி
வருகிறது. இந்தியாவில் பொழுதுபோக்கு என்றால்
ஜியோதான் என்று சொல்லும்படி ஜியோ ஸ்டியோஸ், ஜியோ சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் வளர்ந்து
வருகின்றனர். இந்தியர்களின் உள்ளங்கையில் உலகம் இருக்கும் என்று முகேஷ் அம்பானி ஒருமுறை
கூறினார். அந்த இலக்கை எட்டுவது அவருக்கு இனி எளிதாகவே இருக்கும்.
ஆனந்த் மகிந்திரா
கருத்துகள்
கருத்துரையிடுக