விவசாயத்துறையில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தவேண்டும்! - பர்னிக் சித்ரன் மைத்ரா







Harvest, Thanksgiving, Pumpkin, Vegetables, Decoration
cc





பர்னிக் சித்ரன் மைத்ரா

ஆர்தர் டி லிட்டில் நிறுவன தலைவர்

இந்தியாவின் வேளாண்மை எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்?

இந்தியா சுதந்திரம் பெற்றபிறகுதான் விவசாயத்தில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டது. இப்போதும் கூட 60 சதவீத விவசாய வளர்ச்சியைத்தான் இந்தியா பெற்றுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கான சரியான விலை கிடைக்கவிடாமல் தடுப்பது ஏபிஎம்சி சட்டமும், இடைத்தரகர்களும்தான். இதற்கு விதிவிலக்காக பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரம் உள்ளன. அரிசி, கோதுமை மட்டும் விலைப்பிரச்னையில் சிக்காமல் உள்ளது. விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இன்றுவரை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை விட 50 சதவீதம் குறைந்த விலையே கிடைத்து வருகிறது. இதன்காரணமாக வேளாண்மை காரணமாக பொருளாதாரத்திற்கு கிடைக்கும் வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

பிற வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த பொருளாதார வளர்ச்சி 100 முதல் 300 சதவீதமாக உள்ளது.

வேளாண்மை செய்வது சூழலுக்கு உகந்த தொழிலாக மாறியுள்ளது என்கிறீர்களா?

வேளாண்மை தொழிலானது 52 சதவீத தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டு உற்பத்தியில் இதன் அளவு 13 சதவீதமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளின் தோராய வருமானம் என்பது 60 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. இப்போது கிராமத்திற்கு சென்றுள்ள இடம்பெயர் தொழிலாளர்கள் காரணமாக சம்பள அளவு 30 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. உணவு பதப்படுத்தல் துறை தொழிலாளர்களின் வருகையால் பெருமளவு வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இப்போது ஆண்டுதோறும் 5 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது.

விவசாயிகளுக்கு எம்முறையில் சரியான ஊதியத்தை வழங்க முடியும் என்கிறீர்கள்?

விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச தொகையும் கூட ஏராளமான ஓட்டைகளைக் கொண்டது. இதன் காரணமாகவே பணவீக்கம் ஏற்படுகிறது. உணவு அனைவருக்கும் கிடைக்காமல் தவிக்கவும் நேருகிறது.

பொருட்களை பாதுகாக்கும் வசதி, தரத்தைக் கண்டறியும் வசதி, சரியான விலைக்கு விற்பது ஆகியவற்றுக்கு டிஜிட்டல் வழியில் ஆதரவு தேவை. உணவுப்பொருட்களை குறிப்பிட்ட பிராண்டு வழியாக விவசாயிகள் விற்க முனைந்தால் வருமானம் பற்றிய பிரச்னைகள் எழாது.

விவசாயத்தை முன்னேற்ற உங்களிடம் ஏதாவது திட்டமிருக்கிறதா?

விவசாயத்தை ஏராளமான அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி மேம்படுத்தவேண்டும். சந்தைப்படுத்தலை இன்னும் நவீனப்படுத்தவேண்டும். ஏற்றுமதிக்கு சாதகமான பல்வேறு விதிகளை மாற்றவேண்டும்.

தி இந்து ஆங்கிலம்

மினி தேஜஸ்வி


கருத்துகள்