மக்கள்தொகை கட்டுப்பாடு, பெண்களின் கருத்தரிப்புக்காக பாடுபடும் மருத்துவர்! லீனா வென்
லீனா வென்
மருத்துவர். லீனா வென்,
திட்டமிட்ட பெற்றோர் என்ற தன்மையை சமூகத்தில் உருவாக்க போராடி வருகிறார். பிறப்புக்கட்டுப்பாடு,
புற்றுநோய் கண்டறியும் சோதனை, உளவியல் ஆலோசனைகளள் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் ஆகியவற்றை
வழங்கி வருகிறார். பால்டிமோரின் சுகாதார கமிஷனரான போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பைத்
தடுக்க தடுப்பு மருந்தான நாலோக்ஸோனை வீடுதோறும் மக்களுக்கு வழங்கிவருகிறார். நோயாளிகளுக்கு
உண்டான அடிப்படை உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வு செய்துவருகிறார். இவர் மருத்துவர்களை
பெரிதும் மதிக்க காரணம், லீனா வென் பிறக்கும்போது பெரும் சவால்களை சந்தித்தார். நோயுற்ற
குழந்தையாக பிழைக்கவே கஷ்டப்பட்டவரை காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள்தான். இதுவே அவரை
சமூகத்தில் மக்களுக்கான உரிமைகளைப் பெற தீவிரமாக உழைக்க வைத்திருக்கிறது. அவரது அம்மா
கண்ணியமான முறையில் இறக்கவும் இதுவே உதவியது.
டைம்
சிந்தியா நிக்ஸன்
கருத்துகள்
கருத்துரையிடுக