இனவெறி காரணமாக வெளிநாட்டு செஃப்கள் எனது காபி குவளையில் எச்சிலைத் துப்பினர்! - விகாஸ் கண்ணா, பிரபல செஃப்








நான் ஒன்றும் பெரிதாக ...








விகாஸ் கண்ணா

சமையற்கலைஞர்

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் வசிக்கும் விகாஸ், பசியில் வாடும் மக்களுக்கு ஃபுட்டிரைவ் இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் உணவுகளை வழங்கி உதவி வருகிறார்.

பெருந்தொற்று பாதிப்பு பெரும்பாலும் தனிநபர்களை கடினமாக பாதித்துள்ளது. இந்த நிலையில் மற்றவர்களுக்கு பசிக்கு உதவும் எண்ணம் எப்படி தோன்றியது?

என்னுடை அம்மாதான் இந்த திட்டத்திற்கு காரணம். இந்த நேரத்தில் பசியில் இருக்கும் மக்களுக்கு நீ உதவ வேண்டும் என்று அவர் கோரினார். நான் நியூயார்க்கில் இருக்கிறேன். எப்படி உதவுவது என்று கேட்டேன். உணவு சம்பந்தமாக படித்துக்கூட மற்றவர்களுக்கு உன்னால் உதவ முடியாதா? செல்ஃபி எடுத்து பதிவிட்டால் போதுமா? என்று கேட்டார். அவரின் கேள்வி என்னை கடுமையாக பாதித்தது. இந்தியாவில் உள்ள 125 நகரங்களில் நாங்கள் இப்போது உணவு வழங்கி வருகிறோம்.

உங்கள் செயல்பாடுகள் போதுமானதாக தோன்றுகிறதா?

நிச்சயம் இல்லை. நாங்கள் தினசரி செயல்பாடுகளில் மக்களுக்கு உதவி செய்வதில் தோற்றுத்தான் போகிறோம். நான் திரும்ப எங்களை மேம்பாடு செய்துகொண்டே உழைத்து வருகிறோம். உணவகங்களும் தொழிற்சாலைகளும் ஒன்றுபோன்றவை அல்ல. அவை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலும் இயங்கித்தான் ஆகவேண்டும்.

பிபிசி நேர்காணலில் நீங்கள் பசி பற்றி அறிந்தது அமெரிக்காவில் என்று கூறினீர்கள். மிச்செலின் ஸ்டார் அங்கீகாரம் பெற்றாலும் மோசமான நிகழ்ச்சிகளை சந்தித்திருக்கிறீர்களா?

2008ஆம் ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டு பிரான்சில் சமையல்கலை பற்றி படிக்க சென்றேன். அங்கு நான் சமைத்தபோது, இந்த கருப்பன் சமைத்த உணவை சாப்பிடுவதா? சில சமையற்கலைஞர்கள் திட்டினார்கள். நான் குடிக்கும் காபியில் எச்சிலைத் துப்பினார்கள். நான் எனது பணியில் கவனத்தைச் செலுத்தினேன். இதனால் ராணியை சந்திக்க வரிசையில் வரச்சொன்னபோது, நான் மறுத்துவிட்டேன். அவராகவே என்னுடைய மேசைக்கு அருகில் வந்தார். இதனை பலர் ஆணவம் என்றார்கள். நான் இதனை என்னுடைய பெருமை என்றே நினைக்கிறேன்.

நீங்கள் தி லாஸ்ட் கலர் என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் வாரணாசியில் வாழும் விதவைப் பெண் பற்றி சித்தரித்திருக்கிறீர்கள். எப்படி இந்த எண்ணம் வந்தது?

நாம் நம் நாட்டிலுள்ள பிரச்னைகளை வெளிப்படையாக பேசுவதன் மூலமே அதற்கு தீர்வு காண முடியும். அதற்காகவே நான் இந்த படத்தை உருவாக்கினேன். விரைவில் இந்த படம் வெளியாகும். இப்படத்தில் விதவைப்பெண்களின் துயரும், மிகச்சிறிய சந்தோஷங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியா டுடே

ஸ்ரீவஸ்தவா நெவாதியா


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்