தடய அறிவியலாளரை பழிவாங்கும் சைக்கோ கொலைகாரன்! - தி போன் கலெக்டர் 1999
தி போன் கலெக்டர்
இயக்கம் பிலிப் நோய்ஸ்
கதை டெப்ரி டீவர்
ஒளிப்பதிவு டீன் செய்மர்
இசை கிரெய்க் ஆர்ம்ஸ்ட்ராங்
காவல்துறையினர் சேகரிக்கும்
தடயங்கள் அடிப்படையில் குற்றவாளியை பிடிக்கும் தடய அறிவியலாளரை பழிவாங்கும் சைக்கோ
குற்றவாளியின் கதை.
டென்ஷில் வாஷிங்டன் தான்
தடய அறிவியலாளர். கொலைவழக்கு ஒன்றை நேரடியாக பார்க்கப்போகும்போது கீழே விழுந்து இரண்டு
கால்களும் செயல்படாத நிலை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார்.
அப்போதுதான் காவல்துறையினருக்கு மூளை முடுக்கு பகுதியை விட கடினமான கொலைவழக்கு வருகிறது.
அதில் கொலைகாரன் அடுத்தடுத்த கொலைகளுக்கு சங்கேத குறிப்புகளை வைத்துவிட்டு செல்கிறான்.
ஆனால் அதனை என்னவென்று போலீசாருக்கு விளங்கிக்கொள்ள முடியவில்லை. உடனே டென்ஷில் வாஷிங்டனுக்கு
கம்ப்யூட்டர்களைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். அங்கேயே வேலை பார்க்கும்போது,
ஏஞ்சலினா ஜோலி டென்ஷிலுக்கு அறிமுகமாகிறார். அப்பா இறப்பதை நேரடியாக பார்த்ததால், கொலை
என்றாலே மனம் முழுக்க பதற்றம் கொண்டு நடுங்கும் இயல்பு கொண்டவர் இவர். டென்ஷில் இவரைப்பற்றிய
தகவல்களைப் படித்துவிட்டு எப்படி கொலை நடந்த இடங்களை கவனமாக பார்வையிடவேண்டும், என்னென்ன
விஷயங்களைக் கவனிக்கவேண்டும் என சொல்லிக்கொடுக்கிறார். முதலில் அவர் கூறுவதை மறுப்பவர்,
பின்னர் கொலை வழக்கில் ஆர்வம் கொண்டு டென்ஷில் சொன்ன விஷயங்களை பின்பற்றுகிறார். அதேநேரம்
துறைரீதியில் நிறைய பொறாமை, டென்ஷிலின் திறமை மீது அவநம்பிக்கை கொண்ட உயரதிகாரி என
நிறைய விஷயங்களைக் கடந்து வரவேண்டியிருக்கிறது.
குற்றவாளியின் நோக்கம் என்ன
என்பதை ஏஞ்சலினா, கண்டுபிடிக்கும்போது டென்ஷிலை கொல்ல கொலைகாரன் வீட்டுக்குள் வந்துவிடுகிறான்.
என்னவானது டென்ஷிலின் நிலைமை என்பதுதான் படம்.
சிலர் படத்தின் கதையைப்
பார்த்தவுடன் செவன் என்ற படம் நினைவுக்கு வருகிறதே என நினைக்கலாம். இந்தப்படத்தை முழுமையாக
பார்த்துவிட்டு முடிவுக்கு வாருங்கள். அதுதான் நல்லது.
குற்றத்தின் தடம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக