இந்தியாவில் நடந்த முக்கியமான என்கவுன்டர் படுகொலைகள்! - அரசியல் வளர்த்த சமூகத்தீமையின் முடிவு!











Sniper, Paparazzi, Target, Man, Businessman, Victim








என்கவுன்டர் வரலாறு

ஸ்ரீபிரகாஷ் சுக்லா

1998

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியைச்சேர்ந்த மாஃபியா தலைவர் இவர். செப்டம்பர் 22ஆம் தேதி காசியாபாத்தில் எஸ்டிஎஃப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படையினர் ஏப்ரல் மாதம் தொடங்கி சுக்லாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அவர் தலைநகரான டில்லியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். தனத் பெண்தோழியைச் சந்திக்க காசியாபாத் வந்தபோது கொல்லப்பட்டார்.

வீரப்பன்

2004

கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் காடுகளில் வலம் வந்த மனிதர் வீரப்பன். சந்தனமரங்களை கடத்துவதில் புகழ்பெற்று விளங்கினார். கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வந்து புகழ்பெற்றார். 120க்கு மேற்பட்ட படுகொலைகளைச் செய்தவர் வீரப்பன். அக்டோபர் 18ஆம் தேதி இவரும் இவருடைய இரு சகாக்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிறப்புப்படை இவரைக் கொல்வதற்கான திட்டத்தை இரு ஆண்டுகளாக தீட்டி வந்தது. இவரைப் பிடிப்பதற்காக இவர் பிறந்து வளர்ந்த ஊர்மக்களை இரு மாநில சிறப்பு படையினரும் கடுமையாக சித்திரவதை செய்தனர். வீரப்பன் மறைவு ஒருவகையில் அவர்களுக்கு நிம்மதியைத் தந்திருக்கலாம்.

இஷ்ரத் ஜகான்

2004

இதுவும் குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த என்கவுன்டர்தான். காவல்துறையும், உளவுத்துறையும் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணையும் அவரது மூன்று சகாக்களையும் சுட்டுக்கொன்றனர். ஜூன் மாதம் நடைபெற்ற இந்த படுகொலையை, முதல்வர் மோடி, எல்.கே.அத்வானி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டனர் என்று கூறி அனைவரையும் ஏற்க வைத்து குஜராத் காவல்துறை. அரசியல் வட்டாரத்தில் மிக தீவிரமாக விவாதிக்கப்பட்ட என்கவுன்டர் இது.

 

சொரபுதீன் ஷேக்

2005

இவரும் முக்கியமான ஆள்தான். தீவிரவாதி, முதல்வர் மோடியை கொல்ல முயன்றார் என்று புகார் பத்திரத்தை காவல்துறை வாசித்தது. குஜராத்தின் அகமதாபாத் நகரின் வெளிப்புறத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் ஷேக். 2018ஆம் ஆண்டு இவரது கொலைக்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

ராம் நாரயணன் குப்தா

2006

லக்ஷ்மண் பையா என்று அழைக்கப்பட்டவர். சோட்டா ராஜனுக்கு அருகில் இருப்பவர். இவர் வெர்சோவா அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். அதே நாளில் நவம்பர் 11 அன்று, சோட்டா ராஜன் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

துள்சிராம் பிரஜாபதி

2006

சொரபுதீன் ஷேக்குடன் இணைத்து பேசப்பட்டவர். பெரிய குற்றவாளி எல்லாம் கிடையாது. சிறிய குற்றங்களை செய்து புரமோஷன்  வாங்கும் தகுதியுடன் இருந்தவர்தான். ஆனால் டிசம்பர் மாதம் காவல்துறை போலி என்கவுன்டர் என்று பிறர் விமர்சிக்கும்படி படுகொலையை நடத்தி முடித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் நீதிமன்றம் விடுதலை பெற்று சௌபாக்கியங்களுடன் வாழ்கின்றனர்.

போபால் சிறை கொலைகள்

2016

அக்டோபர் 31 அன்று போபால் சிறையிலிருந்து எட்டுபேர் தப்பிச்செல்ல முயன்றனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமன சிமியைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கண்டறிந்து அவர்களை சுட்டுக்கொன்றது. சரண்டைய காவல்துறை வற்புறுத்தியும் சிறைவாசிகள் தீவிரவாதிகளாக மாறி துப்பாக்கியால் தாக்கத்தொடங்கியதால், அவர்களின் விதி அங்கேயே முடித்துவைக்கப்பட்டது.

ஹைதரபாத் படுகொலை

2019

கால்நடை மருத்துவரை நான்குபேர் வல்லுறவு செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பே மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவர்களை கொல்லவேண்டும் என்று வற்புறுத்தி பேசினர். எனவே, காவல்துறை தங்கள் மீது விழுந்த அழுத்தத்தை சமாளிக்க துப்பாக்கியை கையில் எடுத்தனர். இதனால் அடுத்த நொடி மகத்தான நாயகர்களாக மாறினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் மூலம் குற்றவாளி என நிரூபிக்கப்படும் முன்னரே காவல்துறையால் தீர்ப்பு வழங்கப்பட்டது. மாநிலம் எங்கும் கொண்டாட்டங்கள் களை கட்டின. போலீசாருக்கு இனிப்புகள் ஊட்டப்பட்டன. தாம் வாழும் சமூகத்திற்காக வியர்வை சிந்தி உழைக்கும் சினிமா பிரபலங்கள் இம்முடிவால் மன உவகை எய்தி களிப்புடன் பதிவுகளை இட்டனர்.

சஞ்சய் பட்நாகர்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்