இடுகைகள்

குங்குமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரியனைப் போற்றுவதென்பது.. புதிய மின்னூல் வெளியீடு - இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளம்

படம்
  குங்குமம் வார இதழில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என முதலில் நினைக்கவில்லை. கோகுலவாச நவநீதன் தலைமை உதவி ஆசிரியராக இருந்த காலம் அது. திரு.முருகன் அப்போது குழும இதழ்களின் முதன்மை ஆசிரியர். அவர்தான் என்னை முத்தாரம் இதழுக்கான உதவி ஆசிரியராக தேர்ந்தெடுத்தார். குறைந்த சம்பளம், ஏராளமான வேலைகள் எனக்கு பரிசாக கிடைத்தன.  எனக்கு அன்றிருந்த பெரிய மகிழ்ச்சி, வெள்ளி மலரில் சினிமா கட்டுரைகள், தொடர் எழுதிக்கொண்டிருந்த எனது வழிகாட்டியாக நினைத்த திரு. கே.என்.சிவராமன் சாரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும், காலை வணக்கம் சொல்லும்போது அவரின் முகத்தை பார்க்க முடியும் என்ற மனநிறைவும்தான்.   மொழிபெயர்ப்பு என்பது நானாக முனைந்து கற்றுக்கொண்டதுதான். அதில் நிறைய பிழைகள் உண்டு. தவறுகள் உண்டு. முத்தாரத்தில் உதவி ஆசிரியராக இருந்தபோதும் கூட எனது பெயரில் கட்டுரை வருவது கடினமாக இருந்தது. அதற்கென வெளியில் இருந்து வரும் பல்வேறு தகவல்களை படித்து சரிபார்த்து போட்டால் போதும் என்பதும் முதன்மை ஆசிரியரின் உத்தரவு. குங்குமத்தில் பணியாற்றியவரான இன்னொரு நபர் உடல்நிலை குறைவால் விடுப்பு எடுக்கத் தொடங்க, குங்குமத்த

பழைய நண்பரோடு நடந்த உரையாடல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பழைய நண்பரோடு பேச்சு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள் . நான் இன்றுதான் நெல்சனின் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன் . சீரியசான பிரச்னை தான் ; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது . நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள் . நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது . இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார் . துணிச்சலான முயற்சி . தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம் . இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார் . அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர் . சிறப்பிதழ் வாசிக்க நன்றாகவே இருந்தது . தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது . துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை . நாளை அலுவலக வேலை உள்ளது . உடுத்திச்செல்ல த

கூடுகிற வேலைச்சுமை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான அக்கறை கொண்ட கட்டுரைகள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் வீட்டில் அப்பா , அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள் . நவ .1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால் , எங்கள் நாளிதழ் 15 ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன் . ஃபிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது . இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன . எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை . படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே . ஃபிரன்ட்லைனில் எழுதும் டி . கே . ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர் . இவர் தான் எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம் , அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார் . இப்போது தினசரி அலுவலக வேலைக்கு ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன் . ஃபேஷன் கம்ஃபோர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன . அங்கு தான் அண்மையில் , 1,450 ரூபாய்க்கு சட்டை , பேண்ட் வாங்கினேன் . காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன் . இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது . இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவ

ஆன்மிக அனுபவ தரிசனம் தரும் அருகர்களின் பாதை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  ஜெயமோகனின் அருகர்களின் பாதை நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய கட்டுரை நூல். ஐந்து மாநிலங்கள் வழியாக செய்த பயணம் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். புனைவு அளவுக்கு படிமங்கள் கிடையாது. ஐந்து மாநிலங்கள் வழியாக  சமண ஆலயங்களைத் தரிசித்து செல்லும் பயணம், சந்தித்த மனிதர்கள், கோவில் சிற்பங்கள், அதன் வர்ணனை என அசத்தலாக இருக்கிறது.  எழுத்தாளர் ஜெயமோகன் இங்கு மழை தூறலாக கனமழையாக என பல்வேறு வடிவங்களில் நாள் முழுவதும் சொட்டிக்கொண்டே இருக்கிறது. நேற்றிலிருந்து இன்றுவரை கூரையிலிருந்து விழும் மழைநீரின் ஒலி, சிற்சில வேறுபாட்டுடன் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஈரமான காற்று எப்போதும் ஒருவித பிசுபிசுப்பான தன்மையைக் கொடுக்கிறது. வெளியே குளிர்ச்சி, சட்டைக்கு உள்ளே புழுக்கம் என வித்தியாசமான சூழல் இருக்கிறது. நேஷனல் புக் டிரஸ்டில் புத்தகங்களை வாங்க அருகிலுள்ள தாமரை பப்ளிஷர்ஸை அணுகி உதவி கேட்டேன். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாகும் என்று சொன்னார்கள். வேலை செய்யும் இதழுக்காக சில நூல்கள் தேவைப்படுகின்றன.  பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழை வாங்க நினைத்துள்ளேன்.

சாகித்தியக்காரனின் திறமையை இருட்டடிப்பு செய்துவிட முடியுமா? - கடிதங்கள்

படம்
     pixabay இனிய நண்பர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் வீட்டில் ஆத்தாவின் இறப்புக்குச் சென்றேன் . இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பிறகு சென்னைக்கு திரும்ப வந்துவிட்டேன் . சகோதரர் இன்னும் சில நாட்கள் இருந்து வேலைகளைப் பார்த்துவிட்டு கோவைக்கு செல்வார் . நான் வேலை செய்யும் வார இதழ் நிறுவனத்தில் வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள் , நிருபர்கள் பெயர் திடீரென இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது . அண்மையில் பெண்கள் இதழ் , மருத்துவ இதழ் ஆசிரியர்கள் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டனர் . இதன் காரணமாக எங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் கடுமையாக கோபம் கொண்டுவிட்டது போல . சாகித்தியக்காரனின் திறமையை இப்படி மறைத்துவைத்துவிட முடியுமா ? பணமும் , தன்னகங்காரமும் கண்ணை மறைக்கிறது என்றுதான் கூறவேண்டும் . குங்குமத்தில் தொடராக வரும் முகங்களின் தேசம் - ஜெயமோகன் எழுதுவதை வாசிப்பீர்கள் என நினைக்கிறேன் . நான் என் கைக்கு வரும் இதழில் முதலில் படிப்பது இதைத்தான் . ஈரோடு கதிரின் எழுத்து அப்படியே எஸ் . ரா போலவே இருக்கிறது . காலையில்தான் காலச்சுவடு இதழைப் பட

ஆங்கிலேயர் கால சீக்கிய குடும்பத்தின் வழியே வரலாற்றுப் பயணம்! - கடிதங்கள்

படம்
  விடியல் முகம் - முல்க்ராஜ் ஆனந்த் இனிய தோழர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். இந்த ஆண்டு குருபெயர்ச்சி உண்மையாகவே நிறைய செயல்பாடுகளை செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வந்த குங்குமம் நிருபர், கல்வி வேலை வழிகாட்டி ஆசிரியர் நீலகண்டன், தலைமை உதவி ஆசிரியர் கோகுலவாச நவநீதன், குங்குமம் தோழி ஆசிரியர் வள்ளிதாஸன், குங்குமம் டாக்டர் ஆசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் வரும் நாட்களில் விடைபெற்று வேறு பத்திரிகை அலுவலகங்களுக்கு செல்லவிருக்கின்றனர்.  ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களது செயல்களும் முடிவுகளும்தான் பொறுப்பு. ஆனால் இவர்கள் அனைவரும் பேசி வைத்தது போலவே அடுத்தடுத்து வேலையிலிருந்து விடைபெறுவது பயமாக உள்ளது.  நான் முத்தாரம் இதழின் முழுப் பொறுப்பையும், சூரியன் பதிப்பக ஒருங்கிணைப்பு பணிகளையும் செய்து வருகிறேன். கூடவே குங்குமத்தின் உதவி ஆசிரியர் பணிகளையும் சுமக்கிறேன். இதை சுமத்தப்பட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். இனி என்ன ஆகுமென தெரியவில்லை. தினகரனின் வியாழன் இணைப்பிதழான கல்வி மலருக்கான கட்டுரைகளையும் எடிட் செய்து தரச்சொல்லியிருக்கிறார்கள். தற்போது, புது

எழுதுவதில் வேகத்தோடு தரமும் முக்கியம்! - கடிதங்கள் 2021

படம்
  13.2.2021 அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? 14ஆம் தேதி சந்திப்பிற்காக பலகாரம் வாங்கி வைத்திருந்தேன். உங்களுக்கு முன்னமே குறுஞ்செய்தி அனுப்பியது நல்லதாகிவிட்டது. ஆபீசில் வேலைக்கு வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது. திரும்ப மென்பொருட்கள் பிரச்னை, பாஸ்வேர்டுகள், கட்டுரைகளை எழுதுவது, டெட்லைன் சிக்கல்கள் என வந்துகொண்டிருக்கின்றன. கோ ஆர்டினேட்டராக வேலைகளை ஒருங்கிணைத்தபோதும் எழுதவே நினைத்திருக்கிறேன். இறை அருளால் பத்து மாதத்திற்குப் பிறகு அந்த பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டது நிம்மதியாக இருக்கிறது. இனி எழுத்தை கவனிக்கலாம். கட்டுரை எழுதுவதை விட அதனை செம்மையாக்குவதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளேன். பாலபாரதி சார், உன்னுடைய எழுத்து இன்னும் கொஞ்சம் கூட மாறவேயில்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார். எனவே தற்போது எழுதிவரும் கட்டுரைகளில் பத்திகளுக்கு இடையில் தொடர்பிருக்கிறதா என்று சரிபார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் எழுதிய அரைகுறை ஐடியாக்களைக் கொண்ட கட்டுரைகளை பதிப்பித்த உங்கள் நினைவுகூர்கிறேன். நன்றி சார்.  என

வாழும் அலாரமாக மாறிய கதையை கேட்க ஆசையா? கடிதங்கள்

  வாழும் அலாரமாக மாறினேன்! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்களது நாளிதழ் பணிகள் இப்போது எளிமையாகி இருக்கும் என நம்புகிறேன் . எங்கள் பத்திரிகையிலும் வேலைகள் எப்போதும்போல வேகம் பிடித்து நடந்து வருகின்றன . தினசரி நானும் அலுவலக சகாவுமான பாலபாரதி சாரும் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து வருவோம் . அவர் ரயில் ஏறி மடிப்பாக்கம் வரை செல்கிறார் . குங்குமத்தில் வேலை செய்தபோது பொறுப்பாசிரியராக இருந்தவர் என்னை அதிகாலை எழுந்து அவருக்கு போன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதை சொன்னேன் . உடனே பாரதி சார் , இது சாதிக்கொடுமை தானே என்று சொல்லி டிவியில் வேலை செய்தபோது அவர் பார்த்த விஷயங்களை பேசத் தொடங்கிவிட்டார் . இந்த விஷயத்தை உங்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் . அப்போது இருந்த சூழலில் இதுபோல பொறுப்பாசிரியர் பேசுவார் என்று நினைக்கவில்லை . பாரதி சார் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம் . நான் அந்த சமயத்தில் அந்த கோரிக்கை வினோதமாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அதன் பின்னணி இப்படி இருக்கும் என நினைக்கவில்லை . நான் அவர் அப்படி கூறியதும் , என்னடா சீனியர் இப்படி சொன்னார் எ