இடுகைகள்

ஆல்கஹால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பீர் பெல்லிக்கு என்ன கார ணம் அறிவீர்களா?

படம்
பிக்சாபே பீர் பிற மதுபானங்களை குடிக்காத நேர் வகிடு எடுத்து சீவிய நல்லவர்கள் கூட பீர்தானே ஆல்கஹால் குறைவு என கல்பாக எடுத்து அடிப்பார்கள். அந்தளவு நல்லவனா கெட்டவனா என பலருக்கும் புரியாத மதுபானம், பீர். இதனை மனிதர்களே தயாரித்தனர் என்பது நமக்கான பெருமை.  பொதுவாக அனைத்து பானங்களும் எப்படி தயாரிக்கப்படுகின்றன? தானியங்கள் அல்லது பழங்கள்தானே! இதுவும் அப்படித்தான். தானியங்களை சூடான நீரில் ஊறவைத்து அவற்றிலுள்ள சர்க்கரையைப் பெற்று பீர் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு பதப்படுத்தும் நிலைகள் உள்ளன.  இன்று காமராஜர் சாலைகளிலுள்ள பேக்கரிகளில் ஃப்ரூட் பீர் ஏகபோகமாக விற்கப்படுகிறது. அதனை அனிமேஷன் படிக்கும் அண்ணாத்தைகள் வாங்கிப் பருகி மகிழ்கின்றனர். இதில் ஆல்கஹாலின் அளவு குறைவு. எனவே டாஸ்மாக்கில் வைக்கப்படவில்லை. அப்படி வந்தாலும் மால்களில் உள்ள எலைட் கடைகளில் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். நம் அந்தஸ்து கூட்டத்தில் முட்டிமோதி கெட்டுவிட்டால் என்னாகும்? ஜென்டில்மேனாக பீர் குடித்தாலே வரலாறு நம்மை மறக்காது.  பீரில் ஆன்டி ஆக்சிடன்டுகள், மினரல்கள் பல்வேறு விஷயங்கள் உள்ள

கொரோனாவுக்கு சானிடைசர் பாதுகாப்பு தருமா?

படம்
டாக்டர் எக்ஸ் இன்று கைகளைக் கழுவுங்கள், அதுவும் சோப்பு போட்டுக் கழுவுங்கள் என்று அரசு முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அக்கறையாக உள்ளன. உண்மையில் கைகழுவினால் வைரஸ் நம் கையை விட்டுவிடுமா என்பது சந்தேகமே. ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை ஹோல்சேல் ரேட்டில் அனைவரும் வாங்கி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் சானிடைசர்களை அழுத்தும் இஸ்க் இஸ்க் ஒலிதான் கேட்கிறது. எங்கள் அலுவலக வளாகத்திலுள்ள மருந்தகங்களில் மாஸ்க் சேல்ஸ் விண்ணுக்கு பறக்கிறது. அப்படியும் விற்பனைக்கு மாஸ்குகள் சரிவர கிடைப்பதில்லை. இதுபற்றி சில கேள்விகள் நமக்கு வந்திருக்கும். அதற்கான பதில்கள் இதோ... சானிடைசரில் எதற்கு ஆல்கஹால் வாசம் வீசுகிறது? இதை கடும் நெடி என்று கூட சொல்லலாம். ஆல்கஹால் நுண்ணுயிரிகளின் உடலிலுள்ள புரத பாதுகாப்பை உடைக்கிறது. இதன்விளைவாக அதன் செயல்பாடு குன்றுகிறது. இதனால்தான் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் எதிரான பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இப்படி புரத அடுக்கை உடைப்பதை டிநேச்சுரேஷன் என்கிறார்கள். சில நுண்ணுயிரிகள் வெப்பம் அதிகரித்தால் செயல்திறன் குன்றி இறக்கும். முட்டைகளை வேக வைத்து சாப்பிடச்ச

குடிக்கும்போது ஆவேசப்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனியின் ஏன்?எதற்கு?எப்படி? சிலர் மது அருந்தியதும் ஆவேசப்படுகிறார்களே ஏன்? மது அருந்தியவுடன் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. சிலருக்கு அது சாக்கு. சில விஷயங்களை அதைச் சாக்காக வைத்து சொல்லலாம். இது உளவியல். அறிவியல்படி என்ன சொல்ல லாம்? மூளையின் முன்முகுளப் பகுதியில் சுய கட்டுப்பாட்டு, முடிவெடுக்கும் பகுதி ஆகியவற்றை மது பாதிக்கிறது. இப்பகுதி மழுங்கும்போதுதான், இதுவரை பார்த்திராத ஜேப்படித் திருடர்களோடு ஜோக் அடித்து சிரிப்பதும், அவர்களோடு சேர்ந்து வண்டியில் வேகமாக செல்வதும், குற்றங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சாதாரணமாக பார்க்கும்போது சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமல் அமைதியாக இருப்பவரும், குடிக்கும்போது டி.ஆர் மாதிரி ஆகிவிடுகிறார். நன்றி பிபிசி

வாசனை திரவியங்களில் ஆண், பெண் வேறுபாடு உண்டா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கான, பெண்களுக்கான வாசனை திரவியங்களில் வேறுபாடு என்ன? அனைத்திற்கும் ஆல்கஹால்தான் மையம். ஆனால் வேறுபடுவது, பெண்களுக்கான வாசனைகள்தான். ஆண்களுக்கு சற்று மூக்கை நெருடும் வாசனைகளையும் பெண்களுக்கு இதமான, ஆழ்ந்து சுவாசித்தால் தெரியும்படியான பூக்கள் வாசனைகளை அமைக்கிறார்கள். இதற்கான காரணம், பெண்களின் உடல் வியர்வை மற்றும் ஆண்களின் உடல் வியர்வை மணம்தான். இதனை அடிப்படையாக வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை பர்ப்யூம்கள், டியோடிரண்ட், சென்ட் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இவன் வேற மாதிரி விக்ரம் பிரபு போல பாடி ஸ்ப்ரேயில் என்ன வித்தியாசம்? என அக்கா பெண்ணின் பாடி ஸ்ப்ரேயை களவாடி களிப்புறுவதும் நம் தேசத்தில் நடக்கும் காட்சிதான். நன்றி:பிபிசி

குடிமகனே... இந்தியாவின் குடிமகனே!

படம்
ஆல்கஹால் குடிகாரர்கள் உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது.  மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர்.  தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழக்க

அகில உலக குடிமகன் சங்கம்!

படம்
ஆல்கஹால் குடிகாரர்கள் உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது.  மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர்.  தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழ