இடுகைகள்

பறவைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டின்னிடஸ் என்றால் என்ன வகையான குறைபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பறவைகள் இடம்பெயர்வது எதற்காக? ஊர்வன, பாலூட்டிகள், மீன், பூச்சிகள் ஆகியவை இப்படி வலசை செல்வது உணவு, இனப்பெருக்கத் தேவைக்காகவே. குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் பெரும்பாலான உயிரினங்கள் வலசை செல்கின்றன. இதில் விதிவிலக்குகளும் உண்டு. பெரும்பாலும் வாழ்க்கை முழுக்க கடலின் வாழும் மீன் இனம், அட்லாண்டிக் சால்மன். இந்த மீன் இனம், இனப்பெருக்கம் செய்யும்போது மட்டும் 2,940 கி.மீ. தூரம் கடந்து தான் பிறந்து வளர்ந்த ஆற்றை அடைகிறது.  டின்னிடஸ் (Tinnitus) என்றால் என்ன? டின்னிடஸ் என்பதற்கு, காதில் கேட்கும் ஒலி என்று பொருள். மனச்சோர்வு கொண்டவர்களுக்கு டின்னிடஸ் நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.  கூச்சல், சலசலப்பு, இசை ஆகியவை கேட்பதும் டின்னிடஸ் நிலையில் உள்ளடங்கும். டின்னிடஸ் ஒலி வெளியிலிருந்து கேட்பதல்ல. இதனை மூளை தான் உருவாக்குகிறது.  காதுக்கு அருகில் உள்ள தசை, ரத்தக்குழாய் ஆகியவற்றில் இருந்து கேட்கும் ஒலிக்கு, சோமாடோ சவுண்ட் (Somato sound)என்று பெயர். பிபிசி சயின்ஸ்போகஸ் ஜூலை 2022 https://www.wikiwand.com/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE

இன்டர்நெட் ஆஃப் அனிமல்ஸ் என்பது ஆச்சரியகரமானது! - மார்ட்டின் விக்கெல்ஸ்கி

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் மார்ட்டின் விக்கெல்ஸ்கி விலங்கியலாளர் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் விலங்குகளின் குணங்கள் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராக மார்ட்டின் விக்கெல்ஸ்கி உள்ளார். இவர் உருவாக்கிய சிந்தனைதான், ஐகாரஸ். இன்டர்நேஷனல் கோ ஆப்பரேஷன் ஃபார் அனிமல் ரிசர்ச் யூசிங் ஸ்பேஸ். 20 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்தை உருவாக்கினார் மார்ட்டின். இப்போதுதான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா விண்வெளி அமைப்புகள் இதற்கு ஆதரவை வழங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டு பிளாக்பேர்ட் பெலாரஸிலிருந்து அல்பேனியாவிற்கு, 1530 கி.மீ. தொலைவுக்கு பயணித்தது. இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்காணித்தது. இதற்கு காரணம், அதன் உடலில் பொருத்திருந்த ட்ரான்ஸ்மீட்டர்தான்.  ஐகாரஸ் திட்டத்தில் நீங்கள் கண்டுபிடித்த விஷயம் என்ன? ஐரோப்பிய ஈல் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, ஐரோப்பிய நாரைகள் 70 சதவீதம் அழிவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்தோம். இதற்காக,  15 ஆயிரம் நாரைகளுக்கு நாங்கள் டேக்குகளை பொருத்த முடிவு செய்தோம். நாரைகள் திடீரென பெரும் எண்ணிக்கையில் இறந்துபோவதை நினைத்துப் பாருங்கள். இவை, காடுகளில் இப்படி இறந்துகிடப்பதை யாரும் பார்

பறவைகள் இல்லாத உலகை கற்பனை செய்யவே முடியாது! - ஸ்காட் வி எட்வர்ட்ஸ்

படம்
  நேர்காணல் ஸ்காட் வி எட்வர்ட்ஸ் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா. பேராசிரியர் ஸ்காட், பரிணாம உயிரியல் துறையில் பணியாற்றுகிறார். பரிணாம வளர்ச்சியில் பறவைகளின் இயல்பு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பல்லுயிர்த்தன்மையில் பறவைகள் எந்தளவு முக்கியமானவை? அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் தான் வளர்ந்தேன். பத்து வயதிலிருந்தே, அங்குள்ள நிறைய மரங்கள், அதில் வாழ்ந்து வந்த பறவைகள் மீது ஈடுபாடு உருவானது. 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்வதும் எளிது. பிற விலங்கினங்களை விட பறவைகளின் சூழலியல் மற்றும் அதன் வாழ்க்கை இயல்புகளை அறிவது எளிது.  காலநிலை மாற்றத்தை பறவைகள் எப்படி சமாளிக்கின்றன? தற்போது, பறவைகளுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதில் முக்கியமானது, வாழிட இழப்பு. மனிதர்கள் காடுகளை பெருமளவில் அழித்துவிட்டதால், பறவைகள் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இந்தியாவின் அரணாக உள்ள இமாலயத்தில், சில தனித்துவமான பறவைகள் வாழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் அவற்றின் வாழிடமும் சுருங்கினால், அவையும் அழிந்துவிடும். வேட்டையாடல், பறவைகளை செல்லப்பறவைகளாக வளர்

அலையாத்திக் காடுகளில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

படம்
  அலையாற்றிக்காடுகளின் சிறப்பம்சங்கள்! அலையாற்றிக் காடுகளிலுள்ள மரங்கள் எப்போதும் பசுமையாக உள்ள இலையுதிரா காடுகள் வகையைச் சேர்ந்தவை. இதன் காரணமாக கார்பன் டையாக்சைட் வாயுவை உட்கிரகித்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இம்மரங்கள் தம் வேர்கள் மற்றும் தண்டுகளிலுள்ள சிறிய சுவாசிப்பு துளைகள் மூலம் காற்றை உறிஞ்சுகின்றன. இத்துளைகளுக்கு லென்டிசெல்ஸ் (Lenticels) என்று பெயர்.  அலையாற்றிக் காடுகளிலுள்ள ரைசோபோராசீயே (Rhizophoraceae) இனத்தைச் சேர்ந்த தாவரங்களின் இனப்பெருக்க முறைக்கு தாயோட்டு விதை முளைத்தல் (Vivipary)என்று பெயர். விலங்கினங்களைப் போல, விதைகளைக் கன்று போல ஈன்று வளர்க்கின்றன. உலக வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, கடலோரப் பகுதிகள் நீரால் அரிக்கப்பட்டு வருகின்றன. அலையாற்றிக் காடுகள் உள்ள பகுதிகளில் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. இவை, இயற்கை அரணாக நின்று தம் வேர்களை நிலத்தில் படர்த்தி நிலப்பரப்பைக் காக்கின்றன.  அலையாற்றிக் காடுகளில் கடல் மீன், இறால், சுறா ஆகியவை ஆண்டு முழுவதும் வலசை வருகின்றன. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்த பிறகே மீண்டும் கடலுக்கு செல்லும். இதன் காரணமாக

சுற்றுலாப்பயணிகளால் ஏராளமான பறவைகள் அழிந்துள்ளன! - சூழலியலாளர் பாரா இஷ்தியாக்

படம்
  சூழலியலாளர் பாரா இஷ்தியாக் பறவைகளை அழித்ததே தொற்றுநோய்கள்தான்!  கடந்த இருபது ஆண்டுகளாக பறவைகளுக்கு பரவும் தொற்றுநோய்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் ஃபரா இஷ்தியாக். 49 வயதாகும் ஃபரா , பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி தனித்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்கிறார். அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் மரபணு பாதுகாப்பு மையத்தில் முனைவர் படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் வழியாக ஹவாயிலுள்ள   பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி ஆய்வுகளை செய்தார்.  ”ஹவாயைச் சேர்ந்த 90 சதவீத பறவைகளை அழிவின் விளிம்பிற்கு தள்ளியதே மலேரியாவும், அம்மை நோயும்தான் ” என்றார் ஃபரா. ஐரோப்பிய கடல் பயணிகளின் வருகையால் பறவைகளுக்கு மலேரியா, அம்மை நோய் பாதிப்பு தொற்றியது. இவற்றுக்கு இயல்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. எனவே, எளிதாக நோய்தாக்கி பலியாகிவிடுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.  கடந்த பத்தாண்டுகளாக இமாலயப் பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றி ஃபரா ஆராய்ந்து வருகிறார். தனது ஆய்வின் வழியாக மலேரியா ஒட்டுண்ணிகள் எப்படி பரவுகின்றன, அதற்கு உதவும் சூழல் ஆகியவற்றை அடையாளம் கண்டார். பறவைகளைப் பிடித்து ஆய்வுத்தரவுகளை எடுக்க 4

அமேசான் காடுகளில் தகவல்தொடர்புக்கான மொழி பயோஅக்கவுஸ்டிக்!

படம்
            சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா என பாடல் கேட்டிருப்பீர்கள் . உண்மையில் குயில் நமக்காகத்தான் பாடுகிறதா ? இல்லவே இல்லை . அவை தகவல்தொடர்புக்கான மொழி அது . இதுபற்ற அமேசான் காடுகளில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் ஆலிவர் மெட்கால்ப் ஆராய்ச்சி செய்து வருகிறார் . ஆராய்ச்சிபூர்வமாக நாம் இன்னும் காட்டுயிர் வாழ்க்கையை புரிந்துகொள்ளவில்லை . அதன் காரணமாகவே இன்றுவரை நம்மால் காட்டுத்தீயை எப்படி ஏற்படுகிறது என்று ஓரளவு தெரிந்துகொண்டாலும் கூட அதனை அணைக்கமுடியவில்லை . இதற்காக இப்போது ஆலிவர் பயன்படுத்தும் முறைதான் பயோஅக்கவுஸ்டிக் . இம்முறையில் பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் தகவல்தொடர்பை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய முடியும் . பறவைகள் குரல் எழுப்பது பாடுவது போன்று தோன்றினாலும் அவை தகவல்தொடர்புக்காக இப்படி செய்கின்றன . அவை தொடர்புகொள்ளும் முறை , அதிலுள்ள செய்தி ஆகியவற்றை அறியவே நாங்கள் முயல்கிறோம் என்றார் ஆலிவர் . மனிதர்கள் பொதுவாக பறவைகளை எப்படி புரிந்துகொள்கிறார்கள்ழ பார்வையின் வழியாகத்தான் . ஆனால் பறவைகளின் உலகில் இம்முறையில் நுழைவது கடினமானது . எனவே , இ